லைக்கா தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் 9ம் தேதி வெளிவந்த படம் ‘தர்பார்’. இப்படம் விடுமுறை நாளிலோ, விசேஷ நாளிலோ வெளியாகாமல் ஒரு சாதாரண வேலை நாளில் வெளியானதால் படத்தின் ஓபனிங் வசூல் எதிர்பார்த்த அளவு அமையவில்லை என்பது உண்மைதான்.
இதே படத்தை பொங்கல் நாளில் வெளியிட்டிருந்தால் தொடர்ந்து 5 நாட்களில் புதிய வசூல் சாதனையைப் படைத்திருக்கும் என்று சொல்பவர்கள்தான் திரையுலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள்.
இருப்பினும் தமிழ்நாட்டில், முதல் நாள் வசூலாக 15 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் சுமார் 8 கோடி, மூன்றாவது நாளில் சுமார் 9 கோடி வசூலித்தது. இருப்பினும் நேற்று விடுமுறை நாள் என்பதால் மீண்டும் முதல் நாள் அளவிற்கு வசூல் செய்து சுமார் 14 கோடியைக் கடந்துள்ளது.