இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் வட மாகாண கடற்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆய்வு அலுவலகத்தின் உதவி பணிப்பாளர் எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு கடல் எல்லைக்கள் குறித்த இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தத்தளித்து மீனவர்களை கடற்படையினர் மீட்டு அவர்களை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ராமேஷ்வரம் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கடற்றொழில் ஆய்வு அலுவலக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

