Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி

April 6, 2024
in News, Sports, முக்கிய செய்திகள்
0
இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி

இலங்கை அச்சகத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள ‘பலவான்களின் சமர்’ என அழைக்கப்படும் பிரின்டர்ஸ் சிக்சஸ் 2024 கிரிக்கெட் போட்டி கொழும்பு 7இல் அமைந்துள்ள என்.சி.சி. (N.C.C.) மைதானத்தில் இன்று 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் 11ஆவது தடவையாக நடத்தப்படும் இப்போட்டியில் சங்கத்தில் அங்கம் வகிக்கும் அச்சக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 மகளிர் அணிகளும் 52 ஆடவர் அணிகளும் பங்குபற்றுகின்றன.

இந்தப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 100,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும், 2ஆம் இடத்தைப் பெறும் அணிக்கு 50,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்டநாயகன் மற்றும் தொடர் ஆட்டநாயகன் ஆகியோருக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கப்பணப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

இந்த Printers Sixes 2024 மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு Advanced Printing Technologies, Colorchroma, Flexiprint & Print USA, JDC Printing Technologies, KWO Printing Needs, Print Care, Sitara Ltd ஆகியன அனுசரணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பு

Next Post

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது !

Next Post
யாழில் மூன்று வயது குழந்தைக்கு தந்தையால் நடந்த கொடூரம்

பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனை செய்த இருவர் கைது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures