Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை; சர்வதேச விசாரணை வேண்டும் | EUவிடம் கோரிக்கை

July 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை; சர்வதேச விசாரணை வேண்டும் | EUவிடம் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்று (22) புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது, தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி உள்ளிட்ட இருவரை அழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தினர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

குறித்த சந்திப்பின் பின்னர், வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 

ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினரை செம்மணி புதைகுழி வாசலில் சந்தித்திருக்கிறோம். அவர்களிடம் எங்களுடைய உயிருக்கு மேலான கோரிக்கையான மகஜரையும் கையளித்திருக்கின்றோம்.

தாங்கள் தங்களால் இயன்ற வரைக்கும் எங்களுக்காக வேலை செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

எங்களுக்கு எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது, என தெரிய வேண்டும். இலங்கையில் இனப்படுகொலை தான் நடந்தது என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனூடாக சர்வதேச நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். உள்ளகப் பொறிமுறைகளையோ, உள்ளக விசாரணைகளையோ அல்லது OMP அலுவலகம் மாதிரி இலங்கை அரசால் அமைக்கப்படுகின்ற அலுவலகங்களையோ நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் எங்களுக்கான நீதியை தரப்போவது இல்லை.

நாங்கள் எத்தனையோ ஆணைக்குழுக்களை சந்தித்திருக்கிறோம், ஆட்சி செய்கின்ற அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்திருக்கின்றோம்.

அது எதுவும் எமக்கு எதனையும் பெற்று தரவில்லை என்ற பிற்பாடு தான் நாங்கள் சர்வதேசத்தின் ஊடான ஒரு விசாரணையை கோரி நிற்கின்றோம்.

நாம் சர்வதேச விசாரணையை கோரி நிற்கிறோம் என்றால், சர்வதேசம் எங்களுக்கு ஒரு சரியான நீதியை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் தான் சர்வதேச தரப்புக்களிடம் கோரிக்கையையும் மனுக்களையும் கையளித்துக் கொண்டிருக்கிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் இதுவரையில் 450 பேருக்கு மேல் எங்களோடு இருந்தவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். எங்களுடைய உறவுகளுக்கான நீதி கிடைக்க வேண்டும்.

கொடூர யுத்தமும் இன அழிப்பும் நடந்த பிற்பாடு கையளித்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசம் தான் தகவல்களை பெற்று வெளிப்படுத்த வேண்டும். கொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

எத்தனையோ விசேட தூது குழுக்கள், பிரதிநிதிகள் இங்கே வந்து போயிருக்கின்றார்கள். ஆனால் இதுவரைக்கும் எங்களுக்கு எந்தவிதமான ஒரு நல்லதொரு வார்த்தைகளை அவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஆகவே, நீங்கள் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவாக இங்கே வந்திருக்கிறீர்கள். ஐநா மன்றத்தில், மனித நேயங்களை நேசிக்கின்ற நாடுகளில் எங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து, எங்களுக்கான சர்வதேச நீதிக்கான விசாரணையை நீங்கள் மேற்கொள்ள உதவ வேண்டும் என்று கூறி, அறிக்கை எமது அறிக்கையை கையளித்தோம்.

எமது இந்த அறிக்கை, அறிக்கை மட்டுமல்ல எங்களுடைய உயிரை உங்களுடைய கையிலே ஒப்படைத்திருக்கின்றோம் என்று கூறி அதனை கையளித்தோம் என்றார்.

Previous Post

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

Next Post

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

மு.க.ஸ்டாலினை சந்தித்தார் எம்.ஏ. சுமந்திரன்   

July 22, 2026
நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

நீங்கள் தந்தது காகிதம் அல்ல | எனது உள்ளத்தால் ஏற்கிறேன் என கூறிய ஐரோப்பிய துதுவர் கார்மென் மேரேனா

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures