இரவு விடுதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.அமைப்பு

இரவு விடுதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.அமைப்பு

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திய வாலிபர் உமர் மாதீன்; இவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெற்றோருக்கு 1986-ம் ஆண்டு பிறந்தவர், புளோரிடா மாகாணத்தின் போர்ட் செயின்ட் லூசி நகரில் வசித்து வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவருக்கு போராளிகள் குழுக்களுடன் தொடர்பு எதுவும் இருந்ததா என்பது பற்றி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே உமர் மாதீன் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் என்றும் அமெரிக்க புலனாய்வு வட்டார தகவல்கள் வெளியாகிஉள்ளது.

ஆர்லாண்டோ இரவு விடுதி தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பும் பொறுப்பு ஏற்று கொண்டு உள்ளது.

இது பற்றிய அறிவிப்பை ஐ.எஸ். அமைப்பின் அல்பயான் குழு வானொலி வெளியிட்டது. தாக்குதல் நடத்தியவர் ”கலிபா சிப்பாய்” என்று அறிவித்து உள்ளது. ஐ.எஸ். அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கில் கடந்த 2014-ம் ஆண்டு கலிபாவை அறிவித்தது.

ஆர்லாண்டோ சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பெருகி வருவது மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் அதிபர் ஒபாமா பேசுகையில் ஆர்லாண்டோ துப்பாக்கி சூடு வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டதாக தெளிவான ஆதாரமில்லை என்றார் என்று ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டு உள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News