Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இதுக்கு முன் இவர்கள் யார் கண்ட்ரோலில் இருந்தார்கள் தெரியுமா? ஸ்பெஷல்

July 9, 2016
in Cinema, News
0
இதுக்கு முன் இவர்கள் யார் கண்ட்ரோலில் இருந்தார்கள் தெரியுமா? ஸ்பெஷல்

இதுக்கு முன் இவர்கள் யார் கண்ட்ரோலில் இருந்தார்கள் தெரியுமா? ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் இன்று பல நடிகர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு சில நடிகர்களே நிலைத்து நிற்கின்றனர், இப்படி இவர்கள் நிலைத்து நிற்க இவர்களின் கதை தேர்வும் ஒரு காரணம். அப்படி ஜெயம் ரவி, விஷால், சித்தார்த், கார்த்தி என பலரும் தமிழ் சினிமாவை கலக்கி வருகின்றனர். இவர்கள் நடிகர்கள் மட்டுமின்றி இயக்குனராக வேண்டும் என்று தான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தனர், அப்படி உதவி இயக்குனராக இருந்து ஹீரோவான நடிகர்களின் தொகுப்பு தான் இந்த பகுதி.

விஷால்

விஷால் இன்று அதிரடி ஆக்‌ஷன் நாயகன், ஆனால் முதலில் இவர் இயக்குனராக வேண்டும் என்றே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், இவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர், செல்லமே படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார்.ஜெயம் ரவி

ஜெயம் ரவி பற்றி கடந்த வாரமே கூறியிருந்தோம், இவர் தன் ஆரம்பத்திலேயே கமல்ஹாசன் போன்ற ஜாம்பவானிடம் பணியாற்றியவர், ஆளவந்தான் படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் ரவி.

கார்த்தி

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவை கலக்கியவர் கார்த்தி. இவர் ஆரம்பத்தில் இந்திய சினிமாவின் நம்பர் 1 இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதில் கூடுதல் சிறப்பம்சமாக சூர்யா நடித்த ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தற்போது மணிரத்னம் இயக்கத்திலேயே நடிக்கவிருக்கிறார் என்பதே குறிப்பிடத்தக்கது.

சித்தார்த்

சித்தார்த்தும் இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனர் தான். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டில் இவர் களம் இறங்க, ஷங்கரின் பார்வையில் விழுந்து பாய்ஸ் படத்தில் ஹீரோவானார்.

பாக்யராஜ்

இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்றால் பாக்யராஜ் தான். இவரும் இயக்குனர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் வந்தவர் தான், இது பலருக்கும் தெரியும், இவரின் குருநாதர் பாரதிராஜா. இவர் நடிப்பிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்தார்.

பாண்டியராஜன், பார்த்திபன்

பாரதிராஜாவால் உருவாக்கப்பட்ட கலைஞன் பாக்யராஜ் என்றால், பாக்யராஜால் உருவாக்கப்பட்ட கலைஞர்கள் பாண்டியராஜன், பார்த்திபன். இருவருமே தங்கள் குருவை போலவே தாங்களே இயக்கி அதில் நடித்து வெற்றியும் பெற்றனர்.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி இன்று ஒரு தேசிய விருது நடிகன், ஆனால், ஒரு இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்பதே அவரின் விருப்பம். நாடோடிகள், போராளி என இவர் இயக்குனராக வெற்றி பெற்றாலும், நடிப்பிலும் கலக்கி வருகிறார், இவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

Previous Post

மங்கள சமரவீரவின் ஐ.நா உரையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Next Post

மகள் திருமணத்திற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ராதிகா

Next Post
மகள் திருமணத்திற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ராதிகா

மகள் திருமணத்திற்கு ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்த ராதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures