Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் | விமல்  

September 21, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் | விமல்  

நாட்டில் அடுத்து ஏற்படும் போராட்டம் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டமாக இருக்கும் எனவும் அப்படியான அழிவின் ஊடாக நாட்டில் இருளான நிலைமைக்கு செல்வதை தவிர்க்கக் கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சபை தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் பட்டினியை தீர்க்க உரிய அறிவியல் வேலைத்திட்டங்கள் இருக்க வேண்டும்

விமல் வீரவங்ச-Wimal Weerawansa

மக்களின் பட்டினி தொடர்பான பிரச்சினையை தீர்க்க உரிய அறிவியல் ரீதியான திட்டங்கள் இருக்க வேண்டும்.பட்டினியை போக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிய மக்களுக்கு உரிமையுள்ளது.

அன்றாடம் சமாளிக்கும் வேலைத்திட்டங்களால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது.

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதை விட பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்வது ஜனாதிபதிக்கு முக்கியமானதாக இருக்கின்றது. அவற்றுக்கு டொலர் இருக்கின்றது. ஏழு, எட்டு பேர் இங்கிலாந்து சென்றுள்ளனர்.

நான் அறிந்த வரையில் அயல் நாடான இந்தியாவில் இருந்து இந்திய ஜனாதிபதியின் பிரதிநிதியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் பிரித்தானியா கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

விமல் வீரவங்ச-Wimal Weerawansa

இலங்கையில் இருந்து நாட்டின் தலைவரே சென்றுள்ளார். சென்றது குறித்து எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் பிரித்தானிய கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வீரபுரங்கப்பு கொல்லப்பட்டது சிறந்தது என்று கூறுகின்றோம். வெல்லஸ்ஸவில் எமது முன்னோர்களை கொன்றது நல்லது என்று நாங்கள் கூறுவதாக அமையும்.

எமது பிக்குமார் கொலை செய்யப்பட்டது நல்லது என்று நாம் கூறுவதாக அமையும். அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 1952 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த ராணி என எழுதப்பட்டுள்ளது.

இப்படியான மனநிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண்பது. இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்.

அவர்களே ஜெனிவாவில் எமது படையினருக்கு எதிராக யோசனையை கொண்டு வருகின்றனர். அவர்களே எமது வரலாற்று சிறப்புமிக்க அறிவு களஞ்சியமான ஓலைச்சுவடிகளை கொள்ளையிட்டனர்.

அவர்களே மலைநாட்டில் காடுகளை அழித்து எடுத்துச் சென்றனர். அந்த வரலாறு தெரியாத, அந்த உணர்வு இல்லாதவர்கள் நாட்டை ஆட்சி செய்கின்றனர் என்றால் அப்படியானவர்களால் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்று எங்களால் நம்ப முடியாது எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Next Post

குருந்தூர் மலை தொடர்பில் அமைச்சரிடமிருந்து சென்ற உத்தரவு

Next Post
வடக்கு, கிழக்கின் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க முயற்சி | சார்ள்ஸ் நிர்மலநாதன்

குருந்தூர் மலை தொடர்பில் அமைச்சரிடமிருந்து சென்ற உத்தரவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

கிளிநொச்சியில் துயரம் : மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

June 10, 2026
விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

விஜய் அண்டனி நடிக்கும் ‘நூறு சாமி ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

June 10, 2026
பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

பூட்டானுக்கு எதிரான வெற்றியானது சாவ் தங்கத்துக்கு குறிவைத்துள்ள இலங்கைக்கு மன வலிமையை அதிகரிக்கச் செய்துள்ளது

June 9, 2026
சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

சுரேஷ் சலே விசாரணை | சந்தேகம் எழுகிறது | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

June 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures