இலங்கை கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட 2 ஆவது ஆழ்கடல் கண்காணிப்பு கப்பல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதிகாரிகளிடம் நேற்று (20) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் பிரிவில் இடம்பெற்றது. இந்திய கப்பல் நிர்மாணிக்கும் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள இக்கப்பலை கையளிக்கும் நிகழ்வில் பிரதமருடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.













