வத்தளை பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிராதான வீதியின் வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைப்பதற்கு கொழும்பு மற்றும் பேலியகொட தீயணைப்புப் படைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

