ஆசியாவில் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு அதிகரித்து வருவது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லோவி நிறுவகம் மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.
பெருந்தொற்று கால குழப்பங்களில் இருந்து பாதிக்கப்படாமல் அவுஸ்திரேலியாவின் செல்வாக்கு ஆசியாவில் அதிகரித்துள்ளதை ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
சிட்னியை சேர்ந்த நிறுவகம் ஆசியாவின் 26 நாடுகளை பிராந்தியத்தில் அவர்களின் செல்வாக்கின் அடிப்படையில் பட்டியலிட்டுள்ளது.
இராணுவ பொருளாதார திறன் இராஜதந்திர கலாச்சார செல்வாக்குகள் குறித்து இந்த ஆய்வு ஆராய்ந்துள்ளது.
அமெரிக்கா சீனா ஆகிய நாடுகள் முதலாம் இரண்டாமிடத்தில் உள்ள அதேவேளை அவுஸ்திரேலியா ஆறாமிடத்தில் காணப்படுகின்றது.
கடந்த வருடம் அவுஸ்திரேலியாவின் இராஜதந்திர செல்வாக்கு சிறந்த முன்னேற்றத்தை காண்பித்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தை விட அன்டனி அல்பெனிஸ் அரசாங்கத்திற்கு அவுஸ்திரேலியாவின் நலன்களை முன்னெடுப்பதில் உள்ள திறனை இந்த முன்னேற்றம் வெளிப்படுத்துகின்றதுஎன ஆய்வில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.