Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசியாவின் நோபல் பரிசு : 2017 – மகசேசே விருது வென்றவர்கள் விவரம்

July 28, 2017
in News
0

ஆசியாவின் நோபல் பரிசு எனக் கருதப்படும் ”ரமோன் மகசேசே விருதுகள்” (2017) வென்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரமோன் மகசேசே 2017 விருதுபெற ஆறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜப்பான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

இவ்விருதுகள், பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக பணியாற்றும்போதே, தனது 49வது வயதில் விமான விபத்தில் உயிரிழந்த ரமோன் மகசேசேவின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்விருது வழங்கும்விழா வரும் ஆகஸ்ட் 31 அன்று நடைபெற உள்ளது.தடைகளை வென்று சாதித்தவர்கள் “இவ்விருதை வென்றவர்கள் துணிந்து செயலாற்றியவர்கள்.

சிறிய அளவிலேயான சாத்தியக்கூறுகள், கடும் அச்சுறுத்தல்கள், வலுவான எதிர்ப்பு ஆகியவற்றைக் கண்டு துவளாமல் கடைசிவரை செயலில் உறுதியாக நின்றதுதான் இவ்விருது பட்டியலில் இவர்கள் இடம்பெறக் காரணம். அவர்களது அணுகுமுறைகள் அனைத்தும் மனித கவுரவத்திற்கான மரியாதை மற்றும் கூட்டு முயற்சியின் ஆற்றல் மீதான நம்பிக்கை ஆகியவற்றில் ஆழம் கொண்டுள்ளன.” என்கிறார் கார்மென்சிட்டா அபெல்லா. இவர் ரமோன் மகசேசே விருது பவுண்டேஷனின் தலைவர்.

இதுகுறித்து அவர் தெரிவித்த விவரம் வருமாறு:

இஷிஸாவா, ஜப்பான்

இஷிஸாவா, ஜப்பான் நாட்டின் சோபியா பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். தென்கிழக்கு ஆசிய வரலாற்று அறிஞர். 162 ஹெக்டேரில் (400 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அங்கோர்வாட் இந்து ஆலயத்தை பாதுகாக்கும் பணியில் தன் வாழ்க்கையின் 50 ஆண்டுகாலத்தை அதற்காக செலவிட்டவர். அங்கோர்வாட் கோயில் பல்வேறு போர் மற்றும் சண்டைகளினாலும் மற்றும் பழைமைத் தன்மையினாலும் அழிய இருந்ததை தடுத்து நிறுத்திய பணி அதில் முக்கியமானது.

கெமர் ரூஜ் ஆட்சியில் அங்கோர் வாட் ஆலய பாதுகாப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. அல்ட்ரா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆட்சி 1979ல் தோல்வியடைந்த பிறகு, கம்போடிய வரலாற்றுச் சின்ன பாதுகாப்பு இயக்கங்களை அழித்தொழித்தொழிப்பு ஒரு முடிவுக்கு வந்தது. இஷிகாவா தனது சொந்த முயற்சியில் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். ஜப்பான் மற்றும் கம்போடியாவில் உள்ள கோவில்களைக் காப்பாற்றுவதற்கு கம்போடியர்களை மையமாக வைத்து ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

கெத்ஸி சண்முகம், இலங்கை

இலங்கை ஆசிரியை கெத்ஸீ சண்முகம்(82), இவர் தனது நாட்டில் முப்பது ஆண்டுகளாக நடந்துவந்த கொடூரமான யுத்தத்தித்தின் நடுவே ஆபத்தான குண்டுவெடிப்புகள், போர் மண்டலங்களில் கைது மிரட்டல்களை மீறி போரில் விதவையானவர்கள், ஆதரவற்றவர்கள் மற்றும் குழந்தைகள் போன்றவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி அவர்களுக்கு வாழும் நம்பிக்கையைத் தந்தவர்.

நபாபன், இந்தோனேசியா

இந்தோனேசியாவைச் சேர்ந்த நபாபன், சுமத்ரா தீவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு நிலத்தை அங்கு வாழும் பழங்குடியினருக்கு மீட்டுத் தந்து அவர்களது அடையாளம் மற்றும் அவர்களது அரசியல் குரல் வெளிப்படுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தவர்.

டாய், சிங்கப்பூர்

டாய், குழந்தையிலேயே தந்தையால் கைவிடப்பட்டவர், வீடற்ற தனது தாயினாலும் ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுவந்து விடப்பட்ட இவரும் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1983லிருந்தே தன்னார்வலர்களைக் கொண்டு சொந்தமாக சமைத்து தனது நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான முதியோர்கள், புலம்பெயர்ந்த வேலையாட்கள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு நாளும் வழங்கிவருகிறார்.

லிலியா டி லிமா, பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன் அரசு அதிகாரிகளின் குடும்பத்தில் இருந்து வந்த லிலியா டி லிமா, பிலிப்பைன்ஸ் பொருளாதார மண்டல அதிகாரசபையின் தலைவர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வேலைகள் உருவாக்கினார். அதற்காக அவர் செய்தது ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை திறந்து வைத்ததுதான். அவரது கண்காணிப்பின் கீழ், இத்தகைய ஏற்றுமதி மண்டலங்களின் எண்ணிக்கையானது எதிர்பாராதவகையில் 2,000 சதவிகிதம் அதிகரித்து 343 ஆக உயர்ந்தது. இதனால் பொருளாதாரமும் உயர, 6 மில்லியனுக்கும் அதிகமான பிலிப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது.

பிலிப்பைன் தியேட்டர் குழு

ஒரு தனியார் அமைப்பாகத்தான் ‘பிலிப்பைன் கல்வி நாடக சங்கம்’ 1967ல் தொடங்கப்பட்டது. இதன் ஆரம்ப நோக்கம் ஒரு தேசிய நாடகக் குழுவை உருவாக்குவது. ஆனால் அப்போது புதியதாக ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பெஃர்டினான்ட் மாக்ரோஸ் தான் ஆட்சியேற்று சில ஆண்டுகளுக்குப் பின் ராணுவ ஆட்சியின் கீழ் நாட்டை கொண்டுவந்து விட்டார். இதனால் மக்கள் பெரும் துன்பத்தைச் சந்தித்தனர். இதனை எதிர்த்து மக்களை போராடச் செய்யும் ஒரு கருவியாக இக்குழு தங்கள் நாடக மேடைகளைப் பயன்படுத்தியது. அதனைத் தொடர்ந்து பாலினப் பிரச்சனைகள், பேரழிவிம்போது மக்கள் சேவையில் ஈடுபட்டது.

சமூக மாற்றத்திற்காக நாடகக் கலை

இந்த பிலிப்பைன் தியேட்டர் குழு “சமூக மாற்றத்திற்கான ஒரு சக்தியாக நாடக கலையை வடிவமைத்ததற்காக” இவ்விருதை வென்றுள்ளது.

Previous Post

இரணைமடு வாய்க்காலை ஆழப்படுத்தும் பணி!

Next Post

விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை யூரோக்கள்

Next Post
விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை யூரோக்கள்

விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை யூரோக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures