அவசர நேர பயணத்தில் பேரழிவை ஏற்படுத்திய பூஜ்ய தன்மை கொண்ட தெளிவற்ற பார்வை நிலை?
கனடா-வியாழக்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ பெரும்பாகத்தை தாக்கிய கொடிய குளிர்காலநிலை வீதிகளை புரட்டிப்போட்டுள்ளது.
ரொறொன்ரோ மற்றும் ரொறொன்ரோ பெரும்பாகம் பூராகவும தாக்கிய பனிப்பொழிவின் தீவிரம்-பலத்த பறக்கும் பனியின் தாக்கம் பணிகள் முடிந்து வீடு திரும்பும் பிற்பகல் நேர போக்குவரத்து பெரும் குழப்பநிலையை ஏற்படுத்தியது.
தெளிவற்ற பார்வை நிலை காரணமாகவும் பனிபொழிவு தொடர்ந்ததாலும் பயணங்கள் ஆபத்து நிறைந்ததாகவும் காணப்பட்டது. எதிர் பார்த்ததைவிட பனிப்பொழிவு அதிகமாக ஏற்பட்டது.
சாலை விபத்துக்களும் ஏராளமாக ஏற்பட்டதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் 60 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மற்றுமொரு குறிப்பிடத்தக்க பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது. வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பித்து சனிக்கிழமை காலை வரை தொடரும். 10-15சென்ரி மீற்றர்கள் வரையிலான பனிபொழிவு எதிர்பார்க்கப்படுகின்றது.குளிரும் அதிகரிகலாம்.






15,929 total views, 5,841 views today
– See more at: http://www.canadamirror.com/canada/76342.html#sthash.N3TcFLlF.dpuf












