வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின், அவர் றெக்க, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டுப் பயலே 2 உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அதன்பின், அவருக்கு சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3ல் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என பார்த்தார். இருந்தபோதும், எல்லா நடிகைகளும் வாய்ப்புக்காக போட்டோ ஷூட் நடத்துவது போல, இவர் கவர்ச்சி வீடியோக்களை எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்.
அரை குறை ஆடையுடன், அவர் ஒரு நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியை வீடியோ பதிவாக்கி, அதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்க்கும் ரசிகர்கள், ஷாலு ஷம்முவை இஷ்டத்துக்கும் விமர்சித்து கலாய்க்கின்றனர்.