Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அயர்லாந்து அணிக்கெதிரான 3 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க வெற்றி

July 18, 2021
in News, Sports
0
மற்றொரு அதிர்ச்சியை கொடுத்த அயர்லாந்து கிரிக்கெட் அணி

அயர்லாந்து அணிக்கெதிரான மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் 70 ஓட்டங்களால் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 1க்கு 1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.

அயர்லாந்தன் டப்லின் நகரில் நடைபெற்ற இவ்விருண்டு அணிகளுக்கிடையிலான 3 ஆவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 346 ஓட்டங்களை குவித்தது.

துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டி கொக் மற்றும் ஜென்மன் மாலன் இருவரும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சிறந்த அடித்தளத்தை அமைத்ததுடன் தமக்கிடையில் 225 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

குயின்டன் டி‍ கொக் 91 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 11 பெளண்டரிகள் அடங்கலாக 120 ஓட்டங்களையும், ஜென்மன் மாலன் 169 பந்துகளில் 16 பெளண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இது தென் ஆபிரிக்க வீரரொருவர் பெற்றுக்கொண்ட நான்காவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து முன்வரிசை வீரர்கள் வரிசையக தமது விக்கெட்டுக்களை தாரை வார்த்தை அரங்கு திரும்பினர்.

ஒரு கட்டத்தில் 92 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தவித்த அயர்லாந்து அணியை கேர்ட்டிஸ் கெம்ப்பரும் கடைநிலை வீரரான சிமி சிங் இருவரும் தமது அணியை கெளரவமான நிலைக்கு இட்டனர்.

அயர்லாந்து அணி 47.1 ஓவர்களில் 276 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

கடைசி வரை போராடிய சிமி சிங் ஆட்டமிழக்காது சதம் அடித்தமை பலரது பாராட்டுக்களையும் பெற்றது. அவர் 91 பந்துகளில் 14 பெளண்டரிகள் அடங்கலாக ஆட்மிழக்காது 100 ஓட்டங்களை விளாசினார்.

பந்துவீச்சில் தப்ரெயிஸ் சம்ஸி, அண்டிலே பெலுக்குவாயே இருவரும் தலா விக்கெட்டுக்களை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் தென் ஆபிரிக்க அணியின் ஜென்மன் மாலன் தெரிவானார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

தினை உருளைக்கிழங்கு மசாலா பூரி

Next Post

ஜேர்மன் வெள்ளத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 156 ஆக உயர்வு

Next Post
ஜேர்மனியில் கடும் மழை, பாரிய வெள்ளப்பெருக்கு ! பலர் மாயம் – 20 பேரின் சடலங்கள் மீட்பு!

ஜேர்மன் வெள்ளத்தால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 156 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures