Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமேஸான் அலுவலகத்திற்கு தினமும் வரும் 6 ஆயிரம் நாய்கள்

April 16, 2018
in News, Politics, World
0
அமேஸான் அலுவலகத்திற்கு தினமும் வரும் 6 ஆயிரம் நாய்கள்

“அவன் ஒரு அதி சிறப்பான வாழ்வை வாழ்ந்தான். டென்னிஸ் பால் (Tennis Ball) விளையாட்டில் அவனை யாராலும் ஜெயிக்க முடியாது. அவன் ஒரு சாம்பியன். அவன் நம் நிறுவனத்தின் பல முக்கிய மீட்டிங்குகளில் பங்கெடுத்துள்ளான். இவனை ஒரு முறை பார்த்துவிட்டு போகும் யாரும் நிச்சயம் அவனுக்கான ஒரு பரிசோடு தான் அடுத்த தடவை வருவார்கள். அப்படி ஒரு செல்லப்பிள்ளை.
இன்று நம் அலுவலகத்திற்கு ஒவ்வொரு நாளும் 6 ஆயிரம் நாய்கள் கொண்டு வரப்படுகின்றது என்று சொன்னால்…அதற்கான விதை இவன் போட்டது. ரூஃபஸுக்கு (Rufus) நன்றி.

அழகான வாழ்க்கையை வாழ்ந்த திருப்தியோடு, அமைதியான மரணத்தைத் தழுவினான் ரூஃபஸ். அவன் இறந்த தினம் – மே, 27, 2009.

லவ் யூ ரூஃபஸ்”
அமேஸான் அலுவலகத்திற்குள் முதன் முதலாக வந்த ரூஃபஸ் எனும் நாய் குறித்து, தங்கள் வலைதளத்தில் இப்படியாகத் தான் பதிவிட்டிருக்கிறது அமேஸான். அமெரிக்காவின் சியாட்டிலில் இருக்கும் அமேஸான் தலைமை அலுவலகத்தில் மொத்தம் 30 கட்டடங்கள் இருக்கின்றன. அதில் ஒரு கட்டடத்திற்கு ரூஃபஸ் என்று பெயரிட்டிருக்கிறார்கள். உலகளவில் நாய்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்கும் மிக சில நிறுவனங்களில் முன்னணியில் இருக்கிறது அமேஸான். நாய்களை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், அப்படி அனுமதிக்கப்படும் நாய்களுக்குப் பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது அமேஸான். 30 ஆயிரம் பேர் பணி புரியும் அமேஸான் தலைமை அலுவலகத்தில், ஒரு நாளைக்கு 6 ஆயிரம் நாய்கள் வருகை தருகின்றன.
உலகளவில் கூகுள், சேல்ஸ் ஃபோர்ஸ், மார்ஸ் போன்ற சில நிறுவனங்கள், தங்கள் அலுவலகத்திற்குள் நாய்களை அனுமதித்தாலும் கூட, அமேஸான் வழங்கும் வசதிகள் வேற லெவல்!

ஒருவர் தன் நாயைக் கொண்டு வர வேண்டுமென்றால், முதலில் தன் மேனேஜரிடமும், தன் டீம் உறுப்பினர்களிடம் அவர்களுக்கு இதனால் பிரச்னை இல்லை என்ற ஒப்புதலை பெற வேண்டும். பின்னர், நாய்க்கு சரியான தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக, நாய் குறித்த தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும்.

அலுவலகத்தின் எந்தக் கட்டடத்திற்குள் நுழைந்தாலும் அங்கு ஓர் அழகான வரவேற்பாளர் உட்கார்ந்திருப்பார். அவருக்கு அருகே “Treat Bucket” என்று ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அது முழுக்கவே நாய்களுக்குப் பிடித்த உணவுகளால் நிரப்பப்பட்டிருக்கும். நாய்கள் வரிசையில் நின்று அதைப் புசிக்கலாம்.

“Treat Bucket”

நல்ல ஆரோக்கியமான, சுவையான உணவை முடித்த பின் சும்மா இருக்க முடியாதல்லவா? எனவே, அது ஓடி, ஆடி விளையாட “Doggie Deck” என்ற இடம். இங்கு நாய்களுக்கான பல விளையாட்டுப் பொருட்கள் இருக்கும்.

நாய்களுக்கான காப்பீடு திட்டத்தையும் ( Pet Insurance)) அமேஸான் நிறுவனம் வழங்குகிறது. மேலும், நாய்கள் இறந்துவிடும் பட்சத்தில், சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அதன் உரிமையாளருக்கு “இழப்புத் துயர விடுமுறை” (Bereavement Leave) அளிக்கப்படுகிறது.

அடுத்தது , ஆயிரம் சதுரடியில் நாய்களுக்கென ஒரு பிரத்யேக பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பெரிய பாறைகள், மரக் கட்டைகள் என நாய்கள் ஏறி, குதித்து விளையாடும் வகையில் பல விஷயங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

நாய்களுக்கான பூங்கா…

பல இடங்களில் நாய்களுக்கான பிரத்யேக “Dogs Only Water Fountains” அமைக்கப்பட்டிருக்கின்றன.

“Dogs Only Water Fountains”

நாய்களுக்கான சிறுநீர் கழிக்குமிடம், மலம் கழிக்க தனியாக “Poop Bag Stations” என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

1.அமேஸானில் மூன்று பிரபல நாய் இனங்கள் இருக்கின்றன: கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever), லேப்ரடார் ரிட்ரீவர் (Labrador Retriever), லேப்ரடூடல்ஸ் (Labradoodles).
2. நிறுவனத்தில் இருக்கும் நாய்களில் பிரபலமான மூன்று பெயர்கள் இருக்கின்றன: லூஸி (Lucy), பெல்லா (Bella), சார்லி (Charlie).

இப்படியாக நாய்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, தேவைகளைக் கண்காணித்து மேம்படுத்துவது என நாய்கள் சம்பந்தமான விஷயங்களை முன்னெடுக்க, நாய்ப் பராமரிப்பிற்காகவே அங்கு ஒரு தனிக் குழு இயங்குகிறது. அந்தக் குழுவுக்கு மேனஜராக இருப்பவர் லாரா ஹிர்ச்ஃபீல்ட் (Lara Hirschfield).

“எங்கள் நிறுவன ஊழியர்கள் பலருக்கும் நாய்கள் வெறும் வளர்ப்புப் பிராணிகள் மட்டுமே கிடையாது. அவர்களுக்கு அவை குழந்தைகள் மாதிரி. ஒருவர் ஒரு அலுவலகத்தில் திறன்பட செயல்பட வேண்டுமென்றால், அந்த அலுவலக சூழல் அவருக்குப் பிடித்த மாதிரியானதாக இருக்க வேண்டும். அந்தச் சூழலை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். நாய்களை அனுமதிப்பதால் எங்கள் ஊழியர்கள் மன அழுத்தம் இன்றி வேலை செய்கிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சி. எங்களுக்கும் மகிழ்ச்சி.” என்று சொல்கிறார் லாரா.

Previous Post

மீண்டும் தலைதூக்கும் இளைஞர்களின் கலவரம்

Next Post

அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்புக்கு ரஷ்யா பதில்

Next Post

அமெரிக்காவின் பொருளாதார தடை அறிவிப்புக்கு ரஷ்யா பதில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026

Recent News

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

உலகச் சந்தை விலை அதிகரிப்பால் உள்நாட்டில் தற்காலிக எரிபொருள் விலை மாற்றம்!

May 31, 2026
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

சினோபெக் மற்றும் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures