அமெரிக்க பொலிஸார் மீதான தாக்குதலுக்கு கனேடிய பிரதமர் இரங்கல்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமது டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து பதிவு செய்துள்ள ஜஸ்ரின் ரூடோ, இந்த தாக்குதல் சம்பவத்தினால் கனேடியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் இந்த கோர சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கனடா உறுதுணையாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கறுப்பு இனத்தவர்கள் அமெரிக்க பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம்; முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது பொலிஸாரை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












