அத்தி வரதர் வைபவம் மூலம் இந்து அறநிலைய துறை எட்டு கோடி ரூபா வருவாய் ஈட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் அத்திவரதரின் சிலை நேற்றிரவு கோயில் திருக்குளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டுக்கான அத்தி வரதர் வைபவம் யூலை-01 ஆம் திகதி ஆரம்பித்து ஆகஸ்ட்- 16 ஆம் திகதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
யூலை- 1 -31 வரை சயன கோலத்தில் காட்சி தந்த அத்தி வரதர் ஆகஸ்ட்- 01 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். மொத்தம் 10 இலட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேவேளை, 47 நாட்களில் ஒரு கோடியே ஏழாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

