மகிந்தவின் 82 மில்லியன் நிதி மோசடி அம்பலம்
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மகிந்த, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அருகில் வைத்துக் கொண்டு இந்த ஊழலை மேற்கொண்டனர்.
இதன் காரணமாகவே தங்களை கைது செய்யுமாறு அச்சமின்றி கூறி வருகின்றனர்.
தவறிழைத்திருப்பார்களாயின் கட்சி பேதமின்றி அவர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட தாம் ஒரு போதும் அச்சமடையப் போவதில்லை.
அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் ஹிருனிகா ஆகியோரின் குற்றங்கள் தொடர்பிலும் தாம் அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஒரு திருடன்-பிரதி அமைச்சர் ரஞ்சன்
பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஸ ஒரு திருடன் என பிரதி அமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த 82 மில்லியன்களை மோசடி செய்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் அவர்மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் எவ்வித நிதி மோசடிகளிலும் ஈடுபடவில்லை என மஹிந்த கூறுவது உண்மைதான் ஏனெனில் அவர் மோசடி செய்தது டொலர்களில் அல்லாமல், ரூபாய்களிலே மோசடிசெய்துள்ளதால் தான் தான் மோசடி செய்யவில்லை என குறிப்பிடுவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த மோசடிகளை பிரபலமான சட்டத்தரணிகள், வங்கி ஆளுநர் தொழில்நுட்பத்தில்விற்பன்னர்களை அருகில் வைத்துக்கொண்டே மஹிந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனால் தான் முடிந்தால் தம்மைக் கைது செய்யுமாறு அவர்கள் பயமில்லாமல்தெரிவிப்பதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே நிதி மோசடி விசாரணைகளில் நேரடியாக வந்து முகம் கொடுக்குமாறும் மஹிந்தவிடம் கோருவதாக பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.