பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து

பிரிட்டன் வெளியேற்றத்தை தாங்குமா ஐரோப்பிய யூனியன்?- நிபுணர்கள் கருத்து

ஏற்கெனவே அகதிகள் நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலைமைகளை எதிர்கொண்டு வரும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மிகப்பெரிய உறுப்பினரான பிரிட்டன் வெளியேறுவதையடுத்து மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது முக்கிய விவகாரத்தில் மக்கள் தீர்ப்பை பிரிட்டன் நாடியதையடுத்து மற்ற நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் இருப்பதா வேண்டாமா என்ற மக்கள் தீர்ப்பு வழிமுறையைக் கடைபிடிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் 60 ஆண்டுகால யூனியன் சிதிலமடையலாம் என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியன் தலைவர் டோனல்ட் டஸ்க் ஏற்கெனவே எச்சரித்த போது பிரிட்டன் வெளியேறினால், “ஐரோப்பிய யூனியன் சிதிலமடைவது மட்டுமல்ல; மேற்கத்திய அரசியல் நாகரிகமே சிதிலமடைந்து விடும்” என்று கூறியிருந்தார்.

மீள் எழுச்சியுற்ற ரஷ்யா மற்றும் உலகின் பெரிய அச்சுறுத்தலான பயங்கரவாதம் ஆகியவற்றை ஐரோப்பா எதிர்கொண்டு வரும் நிலையில் “மக்கள் தீர்ப்பு நமக்கு எதிர்மறையானதாக அமைந்து விட்டால் நமது எதிரிகள் ஷாம்பெய்ன் மதுக்குப்பியைத் திறந்து சியர்ஸ் சொல்லி கொண்டாடுவார்கள்” என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் டோனல்டு டஸ்க் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

‘மிகப்பெரிய அடி’

ஐரோப்பிய யூனியன்: சிட்டிசன் கைடு என்பதன் ஆசிரியரான பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக விரிவுரையாளர் கிறிஸ் பிக்கெர்டன் கூறும்போது, “பிரிட்டன் வெளியேறும் முடிவு ஒரு பெரிய அடிதான், ஆனால் இதனால் அனைத்தும் முடிந்து விட்டது என்று கருத இடமில்லை. ஐரோப்பிய அரசியல் வாழ்க்கையில் ஐரோப்பிய யூனியன் பங்காற்றிய விதம் அபாரமானது, அதனை தற்போது பிரிட்டன் இழக்கவுள்ளது.

ஐரோப்பிய யூனியன் உடனடியாக மறைந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. மெதுவாக பின்னடைவு கண்டு வேறொன்றாக உருமாறும் வாய்ப்புள்ளது. இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை ஐரோப்பிய யூனியனுக்குக் கடினமானது. பிரெக்ஸிட் நடந்து விடும் என்று அனைவரும் நினைத்ததாக நான் கருதவில்லை” என்றார்.

ஐரோப்பிய யூனியனின் சக்திவாய்ந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்காலம் குறித்த இணைந்த திட்டமிடுதலை ஏற்கெனவே தொடங்கி விட்டனர். யூரோ பணத்தை பொதுவாக்குவது என்பதை நிபந்தனையாக வைக்காமல், விருப்பத்துக்கு விட்டுவிடுவது என்ற திட்டத்தையும் தற்போது ஐரோப்பிய யூனியன் பரிசீலித்து வருகிறது.

பிரெக்ஸிட் விவகாரத்தினால் பிரிட்டனைப் பின்பற்றி மற்ற நாடுகளும் மக்கள் தீர்ப்பை நாடலாம் என்ற அச்சமே தற்போது ஐரோபிய யூனியனை பீடித்துள்ளது.

பிரான்சின் வலதுசாரி தலைவர் மரைன் டி பென் ஏற்கெனவே அனைத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளும் பிரிட்டன் போல் மக்கள் தீர்ப்பை நாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதே போல் ஐரோப்பிய ஐயம் கொண்ட நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன், ஆகிய நாடுகளும் மக்கள் தீர்ப்புப் பாதையை திறக்க அழைப்பு விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரஸ்ஸல்ஸில் உள்ள சர்வதேச உறவுகளுக்கான பிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர் விவியன் பெர்டுசாட் கூறும்போது, “ஐரோப்பிய யூனியன் நீடிக்கும், ஆனால் பிரிட்டன் இல்லாமல் பலவீனமடையும்’. நிறுவனங்களை அழிக்க முடியாது, ஆனால் ஒருமைக் குலைவு ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் ஐரோப்பிய யூனியனின் தேவை என்பது இனி பலவீனமாகவே தோன்றும். பல்வேறு அரசியல் திட்டங்கள் முடிவுகளில் ஐரோப்பிய யூனியனின் செல்வாக்கு இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையும்” என்றார்.

ஐரோப்பிய கொள்கை மையத்தின் சிந்தனையாளர் ஜேனிஸ் இம்மானுலைடிஸ் கூறும்போது, “ஐரோப்பிய யூனியன் எதிர்மறையான ஒரு சூழலில் உள்ளது. இந்தக் கதை முடிந்தது, ஆனால் புதியது பிறக்கும். ஆனால் இதுவும் எளிதானதல்ல” என்றார்.

பிரெக்ஸிட் விளைவுகளுக்கு எதிரான நடவடிக்கைகள்:

சந்தைகளைக் காப்பாற்றுதல்:

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மை தற்போது இடர்ப்பாடு கண்டுள்ளது. ஆகவே ஐரோப்பிய யூனியன் சந்தைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டியுள்ளது.

ஐரோப்பிய யூனியனின் 6 முக்கிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் நாளை (சனிக்கிழமை) பெர்லினில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் ஹொலாந்தே ஜெர்மன் சான்ஸலர் அஞ்சேலா மெர்கலைச் சந்திக்கிறார்.

பிரிட்டன் கடைசியாக ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது என்பதை இறுதி முடிவாக எடுத்துவிட்டால் யூனியனிலிருந்து வெளியேறும் நடைமுறைகள் குறைந்தது 2 ஆண்டுகள் நீடிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

– See more at: http://www.canadamirror.com/canada/64780.html#sthash.nC0JwFS4.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News