திட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் கொல்லப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்!
இலங்கை இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு ஒரே மாதிரியாக மரணமடைந்து வருகின்றார்கள்.
இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய (12.06.2016) தினம் யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.
இவருக்கும் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர்தான் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது.
அந்த மர்மம் தொடர்கின்ற நிலையில் சரணடைந்த பல முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் திட்டத்தின்படி,
இலங்கை இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு குறிப்பிட்ட வருடங்களின் பின்னர் விடுதலையான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பலர் மர்மமான ஒரே வகையான நோயினால் பீடிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் இறக்கின்றார்கள்.
இலங்கை இராணுவத்தினரினரால் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான 100 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் கான்ஸர் எனப்படும் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு சாவடைந்துள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சிறிது காலத்தின் பின்னர் கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளான நிலையில் அண்மையில்தான் கிளிநொச்சியில் சாவடைந்தார்.
இலங்கை இராணுவத்திடம் புனர்வாழ்வு பெற்று கான்ஸர் நோய்த் தாக்கத்திற்குள்ளான நிலையில் சாவடைந்த 99 வது முன்னாள் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி காணப்படுகின்றார்.
தமிழினி இறந்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரிடம் புனர்வாழ்வு பெற்ற சிவகௌரி என்ற முன்னாள் போராளியும் கிளிநொச்சியில் கான்ஸர் நோயினால் பீடிக்கப்பட்டு தமிழினி சாவடைந்ததைப் போலவே சாவடைந்திருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியான பூநகரியைச் சேர்ந்த தம்பிராஜா சந்திரலதா என்ற ஆசிரியையும் தற்போது நேற்றைய தினம் (12.06.2016) தமிழினி, சிவகௌரி இறந்ததைப் போலவே இறந்துள்ளார்.
இராணுவத்திடம் புனர்வாழ்வு பெற்று இறந்த முன்னாள் போராளிகள் அனைவருமே கான்ஸர் எனப்படும் புற்றுநோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் ஒரே மாதிரியாகவே மரணமடைந்து வருகின்றமையானது முன்னாள் போராளிகள், மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போது உறவினர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில்,
காணமல் போனவர்களாகக் கூறப்படுபவர்கள் எங்கே என்ற ஒரு முடிவின்றிய நிலையில் அவர்களது உறவுகள் கண்ணீரோடு அவலப்பட்டுவரும் நிலையில்,
இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஒரேமாதிரியான நோயினால் சாவடைந்து வருகின்றமையானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தினரால் இராணுவப் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு சாவடைகின்றமையானது,
முன்னாள் போராளிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் சாகடிப்பதற்காக இராணுவத்தினரால் இராணுவப் புனர்வாழ்வளிப்பின்போது ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட சாகடிப்புச் சதி முயற்சியாக இருக்கலாம் என பலராலும் பலத்த சந்தேகம் எழுப்பப்படுகின்றதுபலத்த சந்தேகம் எழுப்பப்படுகின்றது