டொனால்ட் ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானியர்!

டொனால்ட் ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த பிரித்தானியர்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் வரும் நவம்பர் மாதம் எட்டாம் திகதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப்புடன் குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் மோதுகிறார்.

இந்நிலையில், லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் பிரச்சார நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ஒரு போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை உருவி டொனால்ட் டிரம்ப்பை கொல்லப் பாய்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான வாலிபரின் பெயர் மைக்கேல் சான்ட்போர்ட்(19) என்றும் அவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டிரம்ப்பை சுட்டுக் கொல்லும் திட்டத்துடன் 18 மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு வந்த மைக்கேல், நியூ ஜெர்சி, கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வசித்து வந்துள்ளார். லாஸ் வேகாஸ் பிரச்சார கூட்டத்தின்போது டிரம்ப்பை ‘போட்டுத்தள்ளும்’ திட்டத்துடன் கலிபோர்னியாவில் இருந்து லாஸ் வேகாஸ் நகருக்கு மைக்கேல் காரில் வந்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க டிக்கெட் வாங்கிய மைக்கேல், இதற்குமுன்னர் துப்பாக்கியை பயன்படுத்தியது இல்லை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்துக்கு சென்று, அங்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

ஒருவேளை, லாஸ் வேகாஸ் நகரில் தனது திட்டம் பலிக்காவிட்டால், டிரம்ப்பின் அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் கதையை முடித்துவிடும் எண்ணத்தில் பீனிக்ஸ் நகரில் நடைபெறவுள்ள அவரது அடுத்த பிரச்சார கூட்டத்துக்கான டிக்கெட்டையும் மைக்கேல் வாங்கி வைத்துள்ளார்.

லாஸ் வேகாஸ் நகரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற டொனால்ட் டிரம்ப்பின் பிரச்சார நிகழ்ச்சியில் மெட்டல் டிடெக்டர் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் இருந்ததால் வெறுங்கையுடன் உள்ளே நுழைந்த மைக்கேல், அங்கு இடுப்பில் இருந்த துப்பாக்கி உறையை சரியாக பூட்டாமல் காவலுக்கு நின்றிருந்த போலீஸ் உயரதிகாரியான அமீல் ஜேக்கப் என்பவரின் துப்பாக்கியை உருவ முயன்று வம்பில் மாட்டிக் கொண்டதாக மைக்கேல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அந்த துப்பாக்கியை எடுத்து டிரம்ப்பை சுட்டால் அதிலிருந்து ஒன்றிரண்டு தோட்டாக்கள் வெளியே பாய்வதற்குள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகள் என் உடலை ஜல்லடைக் கண்ணாக துளைத்துவிடும் என்பது எனக்கு தெரிந்திருந்தது.

ஆனால், நான் பிடிபடாமல் சுதந்திரமாக நாளை தெருவில் நடமாட முடிந்தால், நாளையும் அதையே செய்வது என்று திட்டமிட்டிருந்தேன் என்று கூறும் மைக்கேல் சான்ட்போர்ட் மீது நிவேடா கோர்ட்டில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News