Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்

June 16, 2021
in News
0

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை தாக்கம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட தாஜ்மஹால் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2020 மார்ச் 17 ஆம் திகதி தொற்றுநோயின் முதல் அலையின் போது மூடப்பட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 21, அன்று பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டது.

எனினும் அதன் பின்னர் இந்தியாவில் கொவிட்-19 தொற்று இரண்டாம் அலையின் காரணமாக உத்தரபிரதேச ஆக்ராவில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான தாஜ்மஹால் இந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் திகதி மீண்டும் மூடப்பட்டது.

இந் நிலையிலேயே இன்று புதன்கிழமை தாஜ்மஹால் மீண்டும் கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் திறக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால் வருகை தரும் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:

  1. அனைத்து கொவிட்-நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு கட்டத்தில் 650 பேர் மட்டுமே நினைவுச்சின்னத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து நேரங்களிலும் கூட்டத்தை கண்காணிக்க படையினர் நிறுத்தப்படுவார்கள்.
  2. தாஜ்மஹால் ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமி நீக்கம் செய்யப்படும்.
  3. இணையத்தளம் / தொலைபேசி வாயிலாக முன்பதிவு மேற்கொண்டவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படும். ஒரு தொலைபேசி எண் வழியாக ஐந்து டிக்கெட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். வளாகத்தில் எந்த டிக்கெட் கருமபீடங்களும் திறக்கப்படாது.
  4. அனைத்து பார்வையாளர்களும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதுடன், நினைவுச்சின்னத்தின் வாயில்களில் வெப்பத் திரையிடப்படும்.
  5. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், நினைவுச்சின்னத்திற்குள் எந்த பொருளையும் தொட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் தங்கள் சொந்த தண்ணீர் போத்தல்கள் மற்றும் கை சுத்திகரிப்பு மருந்துகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஜூன் 16 முதல் அனைத்து மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தளங்களை மீண்டும் திறக்க திங்களன்று அனுமதித்தது.

இதன் மூலம் நாடு முழுவதும் மொத்தம் 3,693 நினைவுச்சின்னங்கள் மற்றும் 50 அருங்காட்சியகங்கள் திறக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஐரோப்பிய கிண்ணம் : போர்த்துக்கல், பிரான்ஸ் அணிகள் வெற்றி

Next Post

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures