Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

June 17, 2021
in Sri Lanka News
0
மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் மாவட்ட பொது வைத்தியசாலைகளை பொறுப்பேற்பது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 14/06/2021 ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளென அரசாங்க தகவல் திணைகளத்தால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஒன்பது மாவட்ட பொது வைத்தியசாலைகள் மாகாணசபை நிர்வாகத்திடம் இருந்து பலோத்காரமாக பறிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது இலங்கையினுடைய அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயலாகும். இம்மீறலுக்கு அரசாங்கமானது ஏற்கமுடியாத நகைப்பிற்கிடமான காரணத்தை கூறியுள்ளது.
அதாவது மாவட்டம் தோறும் ஒவ்வொரு வைத்தியசாலைகளை தெரிவுசெய்து மத்தியின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதனூடாக தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்தலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறாயின் பலவருடங்களின் முன் மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட திரிகோணமலை மாவட்ட பொதுவைத்தியசாலையின் தரத்தை அவர்களால் ஒரு தேசிய வைத்தியசாலையின் தரத்திற்கு கொண்டுவர முடிந்ததா? இல்லை என்பதே உண்மை.

எனவே பொய்யான காரணங்களை கூறி மாகாணங்களிற்கு பகிர்ந்த அதிகாரங்களை பறிப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரசியலமைப்பு ரீதியாக தொடர்சியாக மத்திய அரசின் நிர்வாகத்திலேயே உள்ளது, இவர்கள் கூறுவதைப்போல தெற்கில் உள்ள போதனா வைத்தியசாலையில் உள்ள வசதிகளை இவர்களால் இதுவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு ஏற்படுத்திக் கொடுக்க முடிந்ததா என்றால் அதற்கும் இல்லை என்பதே பதிலாக உள்ளது.

எனவே மாகாண வைத்தியசாலைகளை தம்வசப்படுத்த அவர்கள் பொய்யான காரணங்களை கூறுவது உறுதிப்படுத்தப்படுகிறது. மாகாண வைத்தியசாலைகளை இதயசுத்தியோடு பலப்படுத்த அவர்கள் விரும்பினால் இப்போது உள்ள சட்ட ஏற்பாடுகளினூடாக அவற்றை மாகாண வைத்தியசாலைகளாக வைத்துக்கொண்டே செய்யலாம்.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தின் ஒன்பதாம் அட்டவணை நிரல்-1 இன் 11.1 இன் பிரகாரம் போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட நோக்கங்களிற்காக தாபிக்கப்பட்ட வைத்தியசாலைகள் தவிர்ந்த பொது வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாணசபைகளின் ஆளுகைக்குட்பட்டவை. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தின் முதலாவது மாகாணசபையினால் 12/01/2016 அன்று அங்கீகரிக்கப்பட்ட 2015ம் ஆண்டின் 1ம் இலக்க சுகாதார சேவைகள் நியதிச்சட்டத்தின் அட்டவணை 1 இல் குறிப்பிடப்பட்டவாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண சுகாதார அமைச்சிற்கு உட்பட்டவை என 2016/02/23 ம் திகதிய அதிவிசேட அரச வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபைகள் எவையுமே இல்லாத நிலையில் அரசியலமைப்பின் 13ம் திருத்தச்சட்டதினூடாக மாகாண சபைகளிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை மீண்டும் பறித்தெடுப்பதென்பது முற்றிலும் சட்டவிரோதமானது.

இவ்வாறே மகிந்த ராஜபக்ஸ அவைகளது ஆட்சிக்காலத்தில் “திவிநெகும” சட்டமூலமூடாக மாகாண விவசாய அமைச்சிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை பறித்ததும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஆயிரம் தேசியப்பாடசாலைகளை உருவாக்குதல் எனும் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மாகாணங்களிற்கு பகிரப்பட்ட அதிகாரங்களை பறிக்க முற்பட்டிருப்பதும் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதனூடாக அதிகாரங்களை பகிர்ந்து இந்நாட்டில் வாழும் அனைத்தினமக்களும் சமானமாக வாழலாம் என்ற கருத்தியலுக்கு தற்போதைய அரசு முரணாக செயற்படுகிறது என்பதற்கு சான்று என்பது திண்ணம்.

Previous Post

2 மாதங்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்ட தாஜ்மஹால்

Next Post

விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கைது

Next Post
விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கைது

விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026
வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

வடக்கு, கிழக்கில் தமிழரின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமாக கையகப்படுத்தவில்லையாம்….

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures