Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமரிடம் முதல்வர் கொடுத்த மனுவில் இதுதான் இருந்திருக்கும்!’ – ஸ்டாலின் கணிப்பு

April 13, 2018
in News, Politics, World
0
பிரதமரிடம் முதல்வர் கொடுத்த மனுவில் இதுதான் இருந்திருக்கும்!’ – ஸ்டாலின் கணிப்பு

தமிழக முதல்வர், பிரதமரிடம் நேற்று அளித்த மனு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரிய மனுவாக இருக்காது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் நிறைவடைந்தும் இன்னும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. முழு அடைப்புப் போராட்டம், ரயில் மறியல் உண்ணாவிரதம், கடையடைப்பு போன்ற போராட்டங்களும் நடைபெற்றன. காவிரி விவகாரம் தொடர்பாகச் சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மற்றொரு பகுதியாகக் ‘காவிரி மீட்புப் பயணம்’ என்ற பெயரில் திருச்சியிலிருந்து கடலூர் வரை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடைப்பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர்களும் உடனிருந்தனர். சந்திப்புக்குப் பின் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர். “உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் இன்னும் வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் என்ற முறையில் நீங்கள் அழுத்தம் தர வேண்டும். மே 3-ம் தேதி வரை காலம் கடத்தாமல் அதற்கு முன்னதாகவே மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். தமிழக எதிர்க்கட்சிகள் நேரில் சென்று பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். போன்ற கோரிக்கைகளை அவரிடம் தெரிவித்தோம் அதற்கு அவர் உங்களின் நிலைமை எனக்குப் புரிகிறது. உங்களின் கோரிக்கைகளை நிச்சயம் மத்திய அரசிடம் கொண்டு செல்கிறேன் என உறுதியளித்ததாகக் கூறினார். முதல்வர் ஏதோ ரோட்டில் செல்பவருக்கு கடிதம் அளிப்பதுபோல பிரதமர் டெல்லி புறப்படும் நேரத்தில் விமான நிலையத்தில் வைத்து மனு அளித்துள்ளார். இது வெறும் கண் துடைப்பு வேலை. அந்த மனுவில் வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்காது. எங்கள் ஆட்சியைக் காப்பாற்ற நீங்கள் துணை நிற்க வேண்டும். தயவு செய்து எங்கள் ஆட்சியைக் கலைத்துவிடாதீர்கள் போன்ற கோரிக்கைகளே இருக்கும். சட்டமன்றத்திலும் அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் நிச்சயம் அந்த மனுவில் இடம் பெற்றிருக்காது” இவ்வாறு குற்றம் சாட்டினார்.

Previous Post

களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Next Post

புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

Next Post
புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

புலம்பும் விவசாய பிரதிநிதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures