Pepper Spray பயன்படுத்திய பொலிஸ்: பரிதாபமாக உயிரிழந்த மனநலம் குன்றியவர்
சுவிட்சர்லாந்தில் உதவி செய்வதாக கருதி மன நலம் பாதிக்கப்பட்ட நபரின் மீது பொலிசார் Pepper Spray பயன்படுத்திய சம்பவம் உயிரிழப்பில் முடிந்துள்ளது.
சூரிச் மாகாணத்தில் குடியிருந்து வரும் 35 வயதான மார்க்கஸ் என்பவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்த நோய் தொடர்பான சைகைகளை வெளிப்படுத்தி வங்துள்ளார்.
இதனால் கவலைக்குள்ளான அவரது மனைவி ஏஸ்தர் தனது கணவரின் செய்கையை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறி உதவிக்கு பொலிசாரை நாடியுள்ளார்.
நள்ளிரவு நேரம் என்பதால் தேவையுணர்ந்து விரைந்து வந்த பொலிசார் மன நலம் குன்றியவரை அமைதிப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் பொலிசாரால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் காவலர் ஒருவரின் ஆலோசனைப்படி மார்க்கஸ் முகத்தில் லேசாக Pepper Spray பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
இதனால் அவர் அமைதியடைவார் என்று எஸ்தருக்கும் பொலிசார் வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் Pepper Spray பயன்படுத்திய பின்னர் மார்க்கஸ் மூச்சுத்திணறியதுடன், அவரை மீட்கும் நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில் சம்பவயிடத்திலேயே மார்க்கஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் Altstetten பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் ஒரு மாதம் கடந்தும் சம்பந்தப்பட்டவரின் உடற்கூறு அறிக்கை கூட பொலிஸ் தரப்பில் இருந்து வழங்கப்படவில்லை. Pepper Spray பயன்படுத்தியதாலையே மரணம் நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்படவில்லை.
குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகளின் மீது குற்றவியல் நடவடிக்கை கூட இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
உளவியல் ரீதியாக சிகிச்சையில் இருப்பவர்கள் மீது இதுபோன்று Pepper Spray பயன்படுத்தப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும் என எஸ்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.