கொரோனா நோயாளிகளை தாக்கும் புதிய தொற்றுநோய்

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு, உரிய நேரத்தில் பரிசோதனை செய்து, தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தாலும், இத்தகைய கொரோனா நோயாளிகளின் உயிருக்கு கருப்பு பூஞ்சை நோய் ( Mucormycosis) எனும் புதிய தொற்று நோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இத்தகைய அரிதான தொற்றுநோய் வட இந்திய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து இதனை கட்டுப்படுத்துவதற்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்து வருகிறது.

இந்த தருணத்தில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகளுக்கும், சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கும் மியூகோமைகோசிஸ் (Mucormycosis) என்றழைக்கப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதை மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் விளக்கமளிக்கையில்,’ இது ஒரு அரிதான தொற்றுநோய். பொதுவாக மண், தாவரங்கள், அழுகிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்ற ஒருவகை பூஞ்சையிலிருந்து உருவாக்குவதாக கருதப்படுகிறது.

இந்த நோய் சைனஸ், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இதுவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆபத்தான தொற்று நோய். கொரோனா நோயாளிகளுக்கு உயிரை காப்பாற்ற வழங்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால், இத்தகைய நோய் தூண்டப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் ஸ்டீராய்டு மருந்துகள் கொரோனா நோயாளிகளின் நுரையீரல் வீக்கத்தை குறைத்து, கொரோனாவை எதிர்த்து போராட உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிக அளவில் செயல்பட தூண்டுகிறது. இத்தகைய தருணங்களில் சில விரும்பத்தகாத பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அதே தருணத்தில் நுரையீரல் சேதமடைவதும் தடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைவதால் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் ஏனைய உடல் இயக்க கோளாறுகளுடன் இருக்கும் நோயாளிகளின் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரித்து விடுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் நோயாளிகள் மியூகோமைகோசிஸ் பிரச்சனைக்குள்ளாகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மியூகோமைகோஸிஸ் என்ற பாதிப்பு இருக்கிறது என்பதை, கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு மற்றும் மூக்கின் வழியே கருப்பா ரத்தம் வெளியேறுவது, முகத்தில் சிதைவை உண்டாக்குவது, கன்ன எலும்புகளில் வலி உண்டாகும். இவையே இதன் முதன்மையான அறிகுறிகளாகும்.

மேலும் வேறு சிலருக்கு முகத்தில் உணர்வின்மை, வீக்கம், மூக்கிற்கும் மேல் வாய்க்கும் இடைப்பட்ட பகுதி நிறம் மாறுதல் குறிப்பாக கருப்பாக மாறுதல், பல்வலி அதிகரித்தல், பார்வை மங்கலாகும் அல்லது இரட்டையாக தெரிவது, காய்ச்சல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் போன்றவையும் இதன் அறிகுறிகளாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் மேலே சொன்ன அறிகுறிகளின் மூலம் மியூகோமைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

டொக்டர் பாக்யராஜ்

தொகுப்பு அனுஷா.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News