ஐசிசியின் “Hall Of Fame” விருது பெறும் வீரர்கள் பெயர் அறிவிப்பு
ஐசிசி வழங்கும் “Hall Of Fame” விருது பெறும் வரிசையில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரன் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனை “Hall Of Fame”-ல் இணைப்பதாக ஐசிசி இன்று அறிவித்தது.
மேலும் இதில் இங்கிலாந்தை சேர்ந்த லோஹ்மான், அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்த்தர் மோரிஸ் மற்றும் ரோல்டன் (மகளிர் கிரிக்கெட் அணி) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
முரளிதரன் ஒரு நாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகளும், டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் 1996 ம் ஆண்டு இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்ல பெரிதும் துணையாக இருந்தவர் முரளிதரன்.
இங்கிலாந்தை சேர்ந்த லோஹ்மான் 18 டெஸ்ட் போட்டிகளில் 112 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இவர் 1901 அம் ஆண்டு 36 வயதில் காசநோயால் அவதிப்பட்டு இறந்தார்.
ஆர்த்தர் மோரிஸ் 1940 ம் ஆண்டுகளில் அசைக்க முடியாத துடுப்பாட்டக்காரராக விளங்கியவர், 46 டெஸ்ட் போட்டிகளில் 12 அரைசதம், 12 சதங்கள் அடித்து, அணிக்கு இரண்டு முறை தலைவராக பதவி வகித்தவர்.
அவுஸ்திரேலியாவின் மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ராவுண்டரான ரோல்டன் 2005 ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண இறுதி போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்தவர். இவர் 14 டெஸ்ட், 141 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வருக்கும் விரைவில் “Hall Of Fame” தொப்பி பரிசாக அளிக்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.