இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், உருவாகியுள்ள படம் அசுரன். இந்தப் படம், அக்., 4ல் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் டப்பிங் பேசுவதற்காக படக் குழு காத்திருக்கிறது. ஆனால், அவர் லண்டனில் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
அதனால், டப்பிங் பணிகளை லண்டனிலேயே மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.












