கடந்த 2001ல் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து, தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
பின், திருமணம் செய்து கொண்டு, சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இல்லற வாழ்க்கைக்குள் புகுந்தார். இல்லற வாழ்க்கைக்கு பரிசாக, ஆரின் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில், அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசினின் சமீபத்திய புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.