தலைப்பைப் பார்த்து சுந்தர் சி-யின் நடிப்பிற்கு இயக்கத்திற்கு யாரோ கொடுத்த மதிப்பெண் அவை என நினைக்க வேண்டாம்.
நடிகராகவும் இருக்கும் சுந்தர் சி நடித்துள்ள இருட்டு படம் அக்டோபர் 11ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை இயக்கியுள்ளார். இப்படம் ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில் விஷால், தமன்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களில் சுந்தர் சியின் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.
இதற்கிடையே இரண்டு படங்களும் அக்.,11ல் ரிலீஸாகலாம் என மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.