கோமாளி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பதைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அந்தப் படத்தை அடுத்து, அவர், ஜன கன மன என தலைப்பிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் அஹ்மத் இயக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி, இந்த படத்தின் ஆக் ஷன் காட்சிகளில் நடித்து வருவதாக தகவல் பரவி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகர் அர்ஜுன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.













