இலங்கையின் பொருளாதார நிலை சிறந்ததாக இல்லையெனவும், நாட்டின் திறைசேரியில் பணம் இல்லாத நிலை காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மருதானையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஒரு நாடு என்ற வகையில் பொருளாதாரத்தில் நாங்கள் ஒரு நல்ல நிலையில் இல்லை. அவ்வாறு நல்ல நிலையில் காணப்பட்டால் அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமாயிருந்திருக்காது.
பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் பதவி உயர்வுக்கான சம்பளம் என்பன தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திறைசேரியில் பணம் இல்லாததன் காரணமாக அதனை நடைமுறைப்படுத்த முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

