Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழின் சிவன் கோவில் காணியில் முஸ்லிம்கள் குடியிருக்க அடுக்குமாடி வேண்டுமாம்!

August 18, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களிற்காக அடுக்குமாடி குடியிருப்பு அமைக்க அனுமதிக்க வேண்டுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

யாழ் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மீளாய்வுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்ட ரிசாத் பதியுதீன்,யாழ்ப்பாணத்தில் 1,500 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள போதும், அவர்களில் 200 குடும்பங்களிற்கு மட்டுமே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், காணி உள்ளவர்களிற்கு காணிகளில் வீடமைப்பதுடன், காணியற்றவர்களிற்கு அடுக்கு மாடி வீட்டுத்திட்டத்தை அமைக்க வேண்டுமெனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மாவட்ட செயலக அதிகாரிகள் கருத்து தெரிவித்தபோது, 1,500 பேர் மீளக்குடியமர பதிவு மேற்கொண்டிருந்தபோதும், அவர்களில் 507 பேர் மட்டுமே மீளக்குடியமர்ந்ததாகவும், அவர்களில் 207 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், எஞ்சியவர்களிற்கு காணியில்லாததால் வீடு வழங்கவில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ரிசாத், யாழ்ப்பாணம் பொம்மைவெளியில் ஏழரை ஏக்கர் நிலத்தை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கொள்வனவு செய்து, முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அதில் அடுக்குமாடி குடியிருப்பை அமைக்கலாம் என்றும், அதற்கான பணத்தை நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்ற அமைச்சே ஒதுக்கும் என்றும் தெரிவித்தார்.

எனினும், யாழ் முதல்வர் அதை சூசகமாக ஆட்சேபித்து , அதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைதான அனுமதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டதுடன், யாழ் நகர மையத்தில் சுற்றுலா தேவைகளிற்காக நிலம் தேவையென கூறியுள்ளார்.

எனினும் நேற்று இரவு அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனது முகப்புத்தகத்தில், அபிவிருத்தி கூட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் பிரதமர் ரணில் யாழ் வந்த சமயத்தில், இந்த வீட்டு திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, ரிசாத் பதியுதீனுடன் முஸ்லிம் மக்களை சந்தித்த யாழ் முதல்வர் ஆர்னல்ட், அதில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

பொம்மைவெளியில் கொள்வனவு செய்யப்பட்ட காணி, ரிசாத் பதியுதீனின் பின்னணியில் கொள்வனவு செய்யப்பட்டதாக விமர்சனம் எழுந்ததோடு, குறித்த காணி, உறுதியில் சிக்கலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறித்த காணியில் வண்ணார் பண்ணை சிவன் கோவிலுக்கும் வேறு சிலருக்கும் பங்குண்டு எனவும் தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்த நடவடிக்கைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Previous Post

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 13 பேர் கைது

Next Post

நாட்டின் பொருளாதாரம் பிரச்சினை- ஜனாதிபதி

Next Post

நாட்டின் பொருளாதாரம் பிரச்சினை- ஜனாதிபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures