Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது – சிறந்த தமிழ்படம் ‛பாரம்

August 10, 2019
in Cinema
0

சினிமா துறைக்கு இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக மூன்று மாதம் தள்ளிப்போன 66வது தேசிய விருதுகள் இன்று(ஆக.,9) அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது.

2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாவித்ரி வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் வெளிவந்த ‛மகாநடி’ படத்தில் நடித்தமைக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படம் ‛நடிகையர் திலகம்’ என்ற பெயரில் மொழிமாற்றமாகி வெளியானது.

சிறந்த தமிழ் படம்
சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வாகி உள்ளது. பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கி உள்ள இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

இருவர் சிறந்த நடிகர்கள்
சிறந்த நடிகர்களாக இருவர் தேர்வாகி உள்ளனர். ஹிந்தியில் வெளிவந்த ‛உரி’ படத்தில் நடித்த விக்கி கவுசல் மற்றும் ‛அந்தாதூன்’ படத்தில் நடித்த ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு நடிகர்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மாவத் – 3 விருதுகள்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தாண்டு பல்வேறு பிரச்னைகளை கடந்து வெளியான படம் பத்மாவத். இப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசையமைப்பாளர் – சஞ்சய் லீலா பன்சாலி, சிறந்த நடனம் – கிருதி மகேஷ் மற்றும் ஜோதி தோமன் (கூமர்… பாடல்) மற்றும் சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங் ஆகிய பிரிவுகளில் விருது பெற்றுள்ளது.

கேஜிஎப் படத்திற்கு 2 விருதுகள்
யாஸ் நடிப்பில் கன்னடத்தில் வெளியான படம் கேஜிஎப். தென்னிந்திய மொழிகளிலும் வெளிவந்து வெற்றி பெற்ற இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த சண்டை மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் பிரிவுகளில் விருது பெற்றுள்ளன.

தேசிய விருதுகள் விபரம்…

சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)

சிறந்த நடிகர்கள்: ஆயுஸ்மான் குரானா(அந்தாதூன்), விக்கி கவுசல்(உரி)

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)

சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)

சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி

சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் – மராத்தி)

சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ – ஹிந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங்(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி – கன்னடம்)

சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)

சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி – கன்னடம்)

சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி – தெலுங்கு)

சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே – தெலுங்கு)

சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே… – படம் நதிசராமி – கன்னடம்)

சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) – கேஜிஎப்(கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு – மலையாளம்)

சிறந்த தமிழ் படம்: பாரம்

சிறந்த தெலுங்கு படம்: மகாநடி

சிறந்த கன்னடம் படம்: நதிசராமி

சிறந்த மலையாள படம்: சூடானி பிரம் நைஜீரியா

சிறந்த ஹிந்தி படம்: அந்தாதூன்

Previous Post

தமிழ் ராக்கர்சில் ‘நேர்கொண்ட பார்வை’

Next Post

எமது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல

Next Post

எமது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை - லக்ஷ்மன் கிரியெல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures