Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் இரண்டால் குறைய வாய்ப்பு!!

August 9, 2019
in News, Politics, World
0

வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளனர்.

இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது. வாக்களர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடையும் என்று தெரிவிக்கப் படுகின்றது.

வலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீளாய்வுக்குட்படுத்தபடுவதில்லை. இந்த ஆண்டும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வருத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி (ஜே/242), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி வடக்கு (ஜே/249), தையிட்டி மேற்கு (ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (ஜே/248), பலாலி வடமேல் (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்து வந்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும். இது தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் கிராம அலுவலர்கள் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தி அறிவிக்குமாறு மாவட்டத்தின் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் தேர்தல்கள் திணைக்களம் தெரியப்படுத்தியும் அது தொடர்பில் அவர்கள் அக்கறை அற்று இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. கடந்த பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களுக்கும் இது தொடர்பான விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர், விண்ணப்பிக்காதவர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றது.

சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இந்தப் பகுதிகளில் வாக்காளர் பெயர்ப்பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில் மீளாய்வு செய்யப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு குறைவடைந்தால் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலின்போது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 5 ஆசனங்களே ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

Next Post

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்!

Next Post

அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறையிட விசேட எண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026
அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures