பாரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த குற்றவாளி! திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
அமெரிக்காவின் டல்லாஸ் மாகாணத்தில் கறுப்பின நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 5 பேர் கொலை செய்யப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய நபர் மிக்கா ஜான்சன் என்பதும், இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நபர் என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே கையில் துப்பாக்கியுடன் இருந்த மிக்கா ஜான்சனை கடைசியில் பொலிசார் சுட்டுக் கொன்றனர்.
இதனை தொடர்ந்து டெக்சாஸில் இவர் வசித்த வீட்டை பொலிசார் சோதனையிட்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இவரது வீட்டிலிருந்து பைப் வெடிகுண்டுகள், வெடிகுண்டு செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள், நவீன ரக துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் வெடித்து சிதறக்கூடிய நிலையில் கொத்து கொத்தாக பொருட்களையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
எனவே பாரிய தாக்குதலுக்கு குற்றவாளி திட்டமிட்டதும், தன்னால் முடிந்தவரை கொலை செய்ய திட்டமிட்டதும் இதன்மூலம் அம்பலமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு முன்பாகவே தனியார் நிறுவன அகாடமியில் இருந்து யுக்திகளை கற்றுக்கொண்டதும் தெரியவந்துள்ளது.












