Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது

May 13, 2019
in News, Politics, World
0

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிற்பகல் காலி மாவட்ட அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு துறை பிரதானிகளுடன் காலி தக்ஷிணபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளும் அதற்காக பிரதேச அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளினால் பாதுகாப்பு துறையினருக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஒத்துழைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக மாகாண மற்றும் மாவட்ட ரீதியில் இந்த சந்திப்பு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கான கூட்டத் தொடர்கள் அண்மையில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இன்று இடம்பெற்ற காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கான சந்திப்பில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

காலி மாவட்ட சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் பாதுகாப்பு நிலைமை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதைப்போன்று தோற்றத்தை சித்தரிப்பதற்கு சிலர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அதன் காரணத்தினால் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தெளிவுடனும் புத்திசாதுர்யத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாத சம்பவம் ஒரு புறமிருக்க சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையே பகைமையை உருவாக்குவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

நாட்டின் இனங்களுக்கிடையே இருக்க வேண்டிய நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் உறுதிப்படுத்தி, அமைதியான சமூகத்தை உருவாக்குவதற்கான பொறுப்பை ஆற்றுவதற்கும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களுக்கு அகப்படாமல் அன்றாட வாழ்க்கையை சுமுகமான முறையில் நடாத்தி செல்வதற்கு சமுதாயத்தை அறிவூட்டுவதற்கு மதத் தலைவர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, சந்திமிக வீரக்கொடி, நிசாந்த முதுஹெட்டிகம, தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன், முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, மாகாண அமைச்சர் விஜயபால ஹெட்டியாராச்சி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோரும் பாதுகாப்பு உயர் மட்ட அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் களுத்துறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் களுத்துறை மாவட்ட அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை பிரதானிகளையும் சந்தித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, மஹிந்த அமரவீர, ஜயந்த சமரவீர உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகளும் பாதுகாப்பு துறை தலைமை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

Previous Post

தீவிரவாத நடவடிக்கையுடன் அரசியல்வாதிகளின் செல்வாக்கு

Next Post

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது

Next Post

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அநுரவின் அமைச்சர்கள் விரைவில் சிறை செல்ல நேரிடும் – உதய கம்மன்பில எச்சரிக்கை

பிள்ளையான் – சலே கைது விவகாரம் : அநுர அரசை கடுமையாக சாடும் கம்மன்பில

July 3, 2026
அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திற்காக மூச்சு விடாமல் பாடிய தமன்

July 3, 2026
BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

BREAKING NEWS: உண்மையான ஊடகவிலாளர்களுக்கு முதலிடம் – கிருபா பிள்ளை

July 2, 2026
நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அஷ்ரஃப் நடிக்கும் ‘போட்டோகிராபர் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures