Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகந்துரே மதூஷ் இன்று நீதிமன்றில் முன்னிலை

May 8, 2019
in News, Politics, World
0

பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷ் இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள மாகந்துரே மதூஷ் கடந்த 5ஆம் திகதி டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டமைக்கு அமைய, குறித்த காலப்பகுதி இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்துடன், மாகந்துரே மதூஷுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுக்களின் சந்தேக நபராக மதூஷ் குறிப்பிடப்பட்டபோதும், விசாரணைகளில் மூலம் சில குற்றசாட்டுக்களுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை எனவும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஆயுதங்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாகவும் அதற்கமைய தனது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என மாகந்துரே மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கை வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இரண்டாவது இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

Next Post

குண்டு தயாரித்தவர்களும் தாக்குதலில் பலி

Next Post

குண்டு தயாரித்தவர்களும் தாக்குதலில் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures