Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புற்றுநோய்க்கு நம்பிக்கை அளிக்கும் புதிய சிகிச்சை

April 11, 2019
in News, Politics, World
0

உலக மக்களை அச்சுறுத்துவதாக புற்றுநோய் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக புதிய சிகிச்சைகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் ‘புரோட்டன் தெரபி’ என்ற சிகிச்சை பற்றி சமீப காலமாக அதிகம் பேசப்படுகிறது. இந்த ‘புரோட்டன் தெரபி’ சிகிச்சை என்பது என்ன?

அணுவுக்குள் புரோட்டன், எலக்ட்ரான், நியூட்ரன் என்பன அடங்கியிருக்கின்றன என்று படித்திருப்போம். இவற்றில் புரோட்டனை அடிப்படையாக வைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் முறையே Proton therapy. அதாவது அணுக்களில் உள்ள புரோட்டன் என்னும் துகள்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒருவகை கதிர்வீச்சு சிகிச்சை இது. மற்ற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சையைப் போல புரோட்டன் தெரபியும் வெளிப்புறமாகக் கொடுக்கக் கூடியதே. இதனால் இதை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சை முறை (External Radiation Beam Therapy) என்றும் சொல்லலாம். தற்போது நவீன முறையில் கொடுக்கக் கூடிய ஒருவகை வெளிப்புற கதிர்வீச்சு சிகிச்சைமுறைதான் இந்த புரோட்டன் தெரபி.

ஒரு கலம் அல்லது அணுவின் நடுவில் உள்ள பகுதியை ‘நியூக்ளியஸ்’ என்கிறோம். அதில் புரோட்டன், நியூட்ரன் ஆகிய துகள்கள் உள்ளன. நியூக்ளியஸைச் சுற்றி எலக்ட்ரான் என்கிற துகள்கள் உள்ளன. இதில் புரோட்டனுக்கு சாதகமான சக்தியும், எலக்ட்ரானுக்கு சாதகமற்ற சக்தியும் உள்ளன. நியூட்ரனுக்கு எவ்வித சக்தியும் இருப்பதில்லை. இதில் சாதகமான சக்தியுடைய புரோட்டன், சாதகமற்ற சக்தியுடைய எலக்ட்ரானை தன்வசம் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடையதாக இருக்கிறது. தற்போது இந்த புரோட்டன்களை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வெளிநாடுகளில் புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது?

Cyclotron என்னும் ஒரு இயந்திரம் மூலமாக புரோட்டன்களுக்குத் தேவையான சக்தியும் வேகமும் கொடுத்து உடலுக்குள் செலுத்தும் போது, அது எந்தப் பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயித்து அந்த ஆழத்திற்குச் செலுத்தி ‘புரோட்டன் தெரபி’ கொடுக்கப்படுகிறது. இதில் புரோட்டன் துகள்களை உடலுக்குள் அதிகபட்சம் 32 செ.மீ ஆழம் வரை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம். இந்த சிகிச்சையில் புரோட்டன்களை உடல் உறுப்புகளுக்குள் செலுத்தும் போது அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் குறைவு.

புரோட்டன்கள் உடலுக்குள் செல்லும் போது, அது ஆங்காங்கே உடனடியாக தன் சக்தியை வெளிப்படுத்துவதில்லை. நிதானமாகவே அதன் சக்தியை வெளிப்படுத்துகிறது. நாம் எந்த பகுதிக்குள் சென்று அதன் சக்தி வெளிப்பட வேண்டுமென்று நிர்ணயித்து அனுப்புகிறோமோ அந்த இடத்திற்கு உள்ளேயே அதன் முழு வீரியமும் வெளிப்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலங்களைச் சுற்றியுள்ள நல்ல கலங்கள் மற்றும் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கும்.

மேலும் உள்ளே செலுத்தும் போதும் வெளியே வரும் போதும் பாதிப்புகள் இருக்காது. ஆனால் பிற சாதாரண கதிர்வீச்சு சிகிச்சைகளில் கதிர்வீச்சினை உள்ளே செலுத்தும் போது பாதிப்புகள் இருக்கும். அது உடலை விட்டு வெளியே வரும் போதும் ஒருசில குறைவான பாதிப்புகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த புரோட்டன் தெரபியை வெளிநோயாளியாக வீட்டிலிருந்து கொண்டு சென்றே பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மருத்துவமனையில் வார்ட்டுகளில் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த சிகிச்சையை நோயின் தன்மை, நோயாளியின் உடல்நிலைகளைப் பொறுத்து ஒரு தடவை முதல் 16 தடவைகள் வரை தேவைக்கு ஏற்ப மருத்துவரே பரிந்துரை செய்வார். புரோட்டான் தெரபி மூலம் பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கலாம்.

குறிப்பாக மூளையிலுள்ள புற்று கட்டிகள், கழுத்து தண்டு வடத்திலுள்ள புற்று கட்டிகள், புெராஸ்டேட் சுரப்பியிலுள்ள புற்று கட்டிகள் போன்றவற்றிற்கு இதன் மூலம் சிகிச்சை அளிக்கலாம். சிறுநீர்ப்பைக்குக் கீழ் இந்த புெராஸ்ட்டேட் சுரப்பி உள்ளது. இதிலுள்ள பிரச்சினைகளைக் குறைப்பதோடு, கதிர்வீச்சினையும் 60 சதவீதம் வரையிலும் குறைக்க முடியும். இதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படுவதையும் பெரியளவில் குறைக்க முடியும்.

தலை, கழுத்து, வாய், உமிழ்நீர் மற்றும் கண் சார்ந்த புற்றுநோய்களுக்கு இந்த சிகிச்சைமுறை பயனுடையதாக இருக்கிறது. கண்ணிலுள்ள புற்றுகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கையில் கண் பார்வையின் தரத்தை 96 சதவீதம் வரை பாதுகாக்க முடியும். கழுத்து மற்றும் வாய் பகுதிகளில் புரோட்டன்களைக் கொண்டு கதிர்வீச்சு சிகிச்சை கொடுப்பதால் விழுங்குதல், ருசியை உணர்தல் போன்ற பிரச்சினைகள் குறைவாக இருக்கும். மண்ணீரல், கல்லீரல் மற்றும் நுரையீரல் சார்ந்த புற்றுநோய்களுக்கும் இந்த சிகிச்சைமுறை உதவியாக இருக்கிறது.

மேலும் குழந்தைகளுக்கு தலை, மூளை, முள்ளந்தண்டு போன்ற உறுப்புகளில் உள்ள புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கும் இந்த சிகிச்சை முறை பெரும் உதவியாக இருக்கும். புதிதாக அறிமுகமாகி பிரபலமாகி வரும் இந்த சிகிச்சைமுறை தற்போது ஆரம்ப நிலையில் இருப்பதால் இதிலுள்ள பிரச்சினைகள் மற்றும் பயன்கள் குறித்து உடனடியாக ஒரு முடிவிற்கு வர முடியாது. எனவே இன்னும் அதிகமானோருக்கு இச்சிகிச்சையை பயன்படுத்திய பிறகே இது குறித்து முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.’’

Previous Post

தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தயாராக இல்லை – எஸ். இராஜேந்திரன்

Next Post

கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசு தீர்மானம்

Next Post

கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைப்பதற்கு அரசு தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures