Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தந்தையொருவரால் குறடால் தாக்கப்பட்ட குழந்தை பலி..!

April 9, 2019
in News, Politics, World
0

மட்டு கொக்கட்டிச்சோலையில் ஓன்றரை வயது குழந்தையொன்று , குறடால் தந்தையின் தாக்குதலிற்குட்பட்ட நிலையில்,  உயிரிழந்துள்ளமையானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால்   மனைவி மீது தாக்க முற்பட்டபோது,  அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது பட்டதில், குழந்தை படுகாயமடைந்த நிலையில்,  மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (08.04.2019) குறித்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்துள்ளது.  இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை, கைது செய்துள்ளதாக  கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த, திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே, உயிரிழந்துள்ளது

இதுபற்றி தெரிய வருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த  30 வயதுடைய பெரியதம்பி திலீபன்,  சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது, மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையின் மீது, குறடு பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்ததையடுத்துள்ளது.இந்நிலையில், குழந்தையின் தந்தை தப்பி ஓடியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று திங்கட்கிழமை (08.04.2019) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08.04.2019) கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடதக்கது.

Previous Post

குதிரைசவாரி செய்து பரீட்ச்சை ஹாலுக்கு சென்ற மாணவி

Next Post

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் – ஜனாதிபதியின் நெகிழ்வு

Next Post

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் - ஜனாதிபதியின் நெகிழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures