Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சில பகுதிகளுக்கு 100 மில்லி மீற்றர் அளவில் மழை

April 9, 2019
in News, Politics, World
0

ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்து வரும் 24 மணித்தியாளங்களில் 100 மில்லி மீற்றர் மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது பின்னர் கிழக்கு மாகாணத்திற்கும் பரவக் கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

சூரியனின் வடதிசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இன்று (08) ஜா எல, கனேமுல்லை, அங்குருவெல்ல, தம்பகொல்ல, அம்பன்போருவ மற்றும் கொட்டகொட ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

நாட்டின் தென்கிழக்கு கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Previous Post

இலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச மட்டத்தில் மதிப்புமிக்கதாக மாற்ற எதிர்பார்ப்பு

Next Post

இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது

Next Post

இனபடுகொலையாளியுமான மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures