வீரமாதேவி படத்தில் நடித்துவரும் சன்னிலியோன், கரன்ஜித் கவுர் என்ற தனது வாழ்க்கை வரலாறு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் மதுர ராஜா படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகின. இந்தநிலையில், அடுத்தபடியாக ரங்கீலா என்றொரு மலையாள படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார் சன்னிலியோன். அவருடன் சுராஜ், சலீம்குமார், கிரிஷ்மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாயர் இயக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.