உதயன், சகுனி, மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில, தற்போது முதன் முறையாக பாலிவுட்டில் தயாராகும் புஜ் என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
அஜய்தேவ்கான், சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா, பிரணீதி சோப்ரா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை அபிஷேக் துதியா இயக்குகிறார். 1971ல் இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே நடந்த போரை மையப்படுத்திய கதையில் இந்த படம் உருவாகிறது.
இப்படத்தில் பிரணிதா நடிப்பது உறுதியாகியிருந்த போதிலும், அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என்பது தெரியவில்லை.











