Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நள்­ளி­ர­வில் சென்று சீனர்­க­ளைச் சந்­திக்­கும் பழக்­கம் எனக்கு இல்லை – விக்கி

April 8, 2019
in News, Politics, World
0

நள்­ளி­ர­வில் சென்று சீனர்­க­ளைச் சந்­திக்­கும் பழக்­கம் எனக்கு இல்லை என்று தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் வடக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றை­யின் கீழ் போர்க் குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைச் செய்யலாம் என்று வடக்கு மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் பின்­னர் தெரி­வித்து வந்த விக்­னேஸ்­வ­ரன். அண்­மை­யில் அந்த விசா­ர­ணையை முன்­னாள் இந்­திய தலைமை நீதி­ய­ர­சர் பக­வதி தலை­மை­யில் மேற்­கொள்­ள­லாம் என்ற ஆலோ­ச­னை­யை­யும் வழங்­கி­யி­ருந்­தார். அவ­ரு­டைய அந்­தக் கருத்தை அர­சி­யல்­வா­தி­கள் கடு­மை­யாக எதிர்த்­து­வ­ரு­கின்­ற­னர்.

கடந்த திங்­கள் கிழமை அது தொடர்­பில் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் மணி­வண்­ணன் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்­துத் தெரி­விக்­கும் போது, கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை விக்­னேஸ்­வ­ரன் தொடர்ந்­தும் வலி­யு­றுத்­தி­னால், அவரை மக்­கள் மத்­தி­யில் அம்­ப­லப்­ப­டுத்­து­வோம் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த விட­யத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ர­னுக்­கும், தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர் விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் வித்­தி­யா­சம் இல்லை என்­றும் மணி­வண்­ணன் கடு­மை­யா­கச் சாடி­யி­ருந்­தார்.
அவ­ரைப் பற்றி தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி முன்­வைத்த விமர்­ச­னம் தொடர்­பில் “உத­யன்” கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்­தார்.

மணி­வண்­ண­னு­டைய அவ்­வா­றா­ன­தொரு பேச்சை தான் அறி­ய­வில்லை என்று தெரி­வித்த விக்­னேஸ்­வ­ரன், தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்­த­கம். அதில் அம்­ப­லத்­துக்கு வராத அந்­த­ரங்­கங்­கள் இருந்­தால் அவற்றை அறிய நானும் ஆவ­லாய் இருக்­கின்­றேன். நள்­ளி­ர­வில் சீனர்­க­ளைப் போய்ச் சந்­திக்­கும் பழக்­கம் எனக்கு இல்லை -என்­றும் பதி­ல­ளித்­தார்.

தமிழ் அர­சி­யல்­ப­ரப்­பி­லுள்ள ஒவ்­வொரு பிர­மு­கர்­க­ளை­யும், ஒவ்­வொரு நாட்­டு­டன் தொடர்­பு­ப­டுத்­திக் குற்­றச்­சாட்டு சுமத்­து­வ­தை­யும், அந்த நாடு­க­ளின் கைப்­பிள்­ளை­க­ளாக இயங்­கு­வ­தாக குறிப்­பி­டு­வ­தை­யும் வாடிக்­கை­யா­கக் கொண்­டுள்ள தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி, சில வாரங்­க­ளின் முன்­னர் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பய­ணம் மேற்­கொண்ட சீனத் தூதர் தலை­மை­யி­லான குழு­வில் அங்­கம் வகித்த, அர­சி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்­பான அதி­கா­ரி­களை நேரில் இர­க­சி­ய­மா­கச் சந்­தித்து பேசி­யுள்­ள­னர் என்று இணை­யத் தளங்­க­ளில் செய்­தி­கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

Previous Post

வடக்கு மாகா­ணத்­தில் 10110 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 33593 பேர் வறட்­சி­யால் பாதிக்­கப்­பு

Next Post

கிறிஸ்தவ பதாகை கிழித்தெறியப்பட்டது

Next Post

கிறிஸ்தவ பதாகை கிழித்தெறியப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures