Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மாகா­ணத்­தில் 10110 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 33593 பேர் வறட்­சி­யால் பாதிக்­கப்­பு

April 8, 2019
in News, Politics, World
0

நாட்­டில் தற்­போது கடும் வெப்­பத்­து­ட­னான கால­நிலை நில­வும் நிலை­யில் வடக்கு மாகா­ணத்­தில் 10 ஆயி­ரத்து 110 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 33 ஆயி­ரத்து 593 பேர் வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். வடக்­கில் யாழ்ப்­பாண மாவட்­டமே அதி­க­ளவு பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெடுந்­தீவு, வேலணை, ஊர்­கா­வற்­றுறை, மரு­தங்­கேணி, காரை­ந­கர் ஆகிய பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­க­ளைச் சேர்ந்த மக்­களே வறட்­சி­யால் பெரு­ம­ளவு பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். நெடுந்­தீ­வில் ஆயி­ரத்து 31 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 3 ஆயி­ரத்து 71 பேரும், வேல­ணை­யில் 2 ஆயி­ரத்து 798 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 9 ஆயி­ரத்து 642 பேரும், ஊர்­கா­வற்­று­றை­யில் 2 ஆயி­ரத்து 422 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 7 ஆயி­ரத்து 848 பேரும், மரு­தங்­கே­ணி­யில் ஆயி­ரத்து 60 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 4 ஆயி­ரத்து 630 பேரும், காரை­ந­க­ரில் 2 ஆயி­ரத்து 760 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 8 ஆயி­ரத்து 297 பேரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ள­னர்.

இந்­தப் பிர­தேச மக்­கள் குடி தண்­ணீ­ருக்­கும், வேறு தேவை­க­ளுக்­கான தண்­ணீ­ருக்­கா­க­வும் நீண்ட தூரம் அலைய வேண்­டி­யுள்­ளது. வேல­ணைப் பிர­தே­சத்­தில் குடி தண்­ணீர் பெறு­வது முடி­யாத காரி­ய­மா­கவே உள்­ளது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

வவு­னி­யா­வில் கடந்த மாத இறு­தி­யில் வறட்­சி­யால் 39 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 105 பேர் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர் என்று இடர் முகா­மைத்­து­வப் பிரிவு அறி­வித்­தி­ருந்­தி­ருந்­தது. இந்த மாதம் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் தொடர்­பான விவ­ரங்­களை இடர்­மு­கா­மைத்­து­வப் பிரிவு வெளி­யி­ட­வில்லை. மன்­னார், முல்­லைத்­தீவு கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளின் பாதிப்பு விவ­ரங்­க­ளும் வழங்­கப்­ப­ட­வில்லை.

நிதி ஒதுக்­கீடுவறட்­சி­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­க­ளுக்­காக அர­சால் சுமார் 6 கோடி ரூபா ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு 5 கோடி ரூபா­வும், புத்­த­ளம் மாவட்­டத்­துக்கு 7 இலட்­சத்து 85 ஆயி­ரம் ரூபா­வும், களுத்­துறை மாவட்­டத்­துக்கு 4 இலட்­சம் ரூபா­வும், கண்டி மாவட்­டத்­துக்கு 2 இலட்­சத்து 19 ஆயி­ரத்து 228 ரூபா­வும், கேகாலை மாவட்­டத்­துக்கு ஒரு இலட்­சத்து 35 ஆயி­ரம் ரூபா­வும், வவு­னியா மாவட்­டத்­துக்கு 78 ஆயி­ரத்து 500 ரூபா­வும், மாத்­தறை மாவட்­டத்­துக்கு 40 ஆயி­ரம் ரூபா நிதி­யும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

உத­வி­கள்வறட்சி மற்­றும் நீரில் உப்பு கலந்­துள்­ள­மை­யால் நீர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்ள 13 மாவட்­டங்­க­ளுக்கு 207 நீர் பவு­ஸர்­க­ளும், 7471 குடி­நீர் தாங்­கி­க­ளும் அர­சால் அந்­தந்த மாவட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

யாழ்ப்­பாண மாவட்­டத்­துக்கு 26 நீர் பவு­ஸர்­க­ளும், 118 குடி­நீர் தாங்­கி­க­ளும், வவு­னியா மாவட்­டத்­துக்கு 15 நீர் பவு­ஸர்­க­ளும், 401 குடி­நீர் தாங்­கி­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ள­து­டன் ஏனைய மாவட்­டங்­க­ளுக்­கும் அவை வழங்­கப்­பட்­டுள்­ளன.

தீப்­ப­ர­வல்வறட்­சி­யான கால­நி­லை­யால் வனப்­பி­ர­தே­சங்­க­ளில் திடீர் தீப்­ப­ர­வல்­கள் ஏற்­ப­டு­கின்­றமை அதி­க­ரித்­துள்­ளன என்று இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வாறு தீப்­ப­ர­வல்­கள் இடம்­பெ­றும் போது அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக முப்­ப­டை­யி­னர் இனங்­கா­ணப்­பட்­டுள்ள மாவட்­டங்­க­ளில் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­னர். அத்­தோடு 117 என்ற அவ­சர தொலை­பேசி இலக்­கத்­தி­னூ­டாக இவ்­வா­றான சம்­ப­வங்­கள் குறித்து தக­வல் தெரி­விக்க முடி­யும் என்­றும் இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலை­யம் தெரி­வித்­துள்­ளது. தீப்­ப­ர­வல் இடம்­பெ­றும் பிர­தே­சங்­களை அண்­மித்து வாழ்­கின்ற மக்­கள் மிகு­நத அவ­தா­னத்­து­டன் செயற்­பட வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மே வரை வெப்­பம்தற்­போது இடப்­ப­ரு­வப் பெயர்ச்சி ஆரம்­பித்­துள்­ளது. எதிர்­வ­ரும் மே மாதம் வரை இடப்­ப­ரு­வப் பெயர்ச்சி நில­வும் என்­ப­தால் வரட்­சி­யான வானிலை நீடிக்­கும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வி­யல் திணைக்­கள வானிலை அதி­காரி மொஹ­மட் சாலி­ஹின் தெரி­வித்­தார்.சூரி­யன் தெற்­கி­லி­ருந்து வடக்கு நோக்கி நகர்­வ­டை­கின்­ற­மை­யால் நேற்று சனிக்­கி­ழமை முதல் ஹங்­குன்­கல்ல, கனே­கொட, களு­போ­விட்­டி­யான, கெட்­ட­வல, வளல்­கொட, சூரி­யவௌ மற்­றும் கல்­க­டுவ ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு மேலாக நண்­ப­கல் 12.12 மணி­ய­ள­வில் சூரி­யன் உச்­சம் கொடுக்க ஆரம்­பித்­துள்­ளது. இந்­நி­லைமை எதிர்­வ­ரும் 15 ஆம் திகதி வரை தொட­ரும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

அறி­வு­றுத்­தல்­கள்சூழல் வெப்­ப­நிலை அதி­க­ரிக்­கும் போது மனி­தர்­க­ளின் உடல் வெப்­ப­நி­லை­யும் அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­புக்­கள் காணப்­ப­டு­வ­தால் அதி­க­ள­வான சுத்­த­மான நீரை பரு­கு­தல், கூடு­த­லாக வெயி­லில் செல்­லா­தி­ருத்­தல், உடல் சுக­வீ­ன­முற்­ற­தாக உணர்ந்­தால் உடனே வைத்­தி­ய­சாலை செல்­லு­தல், குழந்­தை­களை வெயி­லில் அணுப்­பா­தி­ருத்­தல், மற்­றும் இள நிறத்­தி­லான ஆடை­களை அணி­தல் ஆகிய விட­யங்­க­ளில் கவ­னம் செலுத்­து­வ­தன் மூலம் இத­னால் ஏற்­ப­டக் கூடிய பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து தம்மை பாது­காத்­துக் கொள்ள வேண்­டும் என்­றும் மக்­கள் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

Previous Post

சாதனை படைத்­தி­ருக்­கின்­றன யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த புறாக்­கள்

Next Post

நள்­ளி­ர­வில் சென்று சீனர்­க­ளைச் சந்­திக்­கும் பழக்­கம் எனக்கு இல்லை – விக்கி

Next Post

நள்­ளி­ர­வில் சென்று சீனர்­க­ளைச் சந்­திக்­கும் பழக்­கம் எனக்கு இல்லை - விக்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures