இலங்கையின் அந்தமான டொந்தர, மாத்தறையில் இருந்து நாட்டின் தலைப் பகுதியான யாழ்ப்பாணம் வரையான 400 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமான வான் தூரத்தை கடந்து சாதனை படைத்திருக்கின்றன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புறாக்கள்.
ட்ராகன் மவுத், டொந்தர என்ற இடத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பந்தயப் புறாக்கள் பிற்பகலில் யாழ்ப்பாணத்தை அடைந்து இந்தச் சாதனையைப் புரிந்தன என்று பபுகயா அறிவித்துள்ளது.
பந்தயப் புறாக்கள் கழகம் – யாழ்ப்பாணம் (பபுகயா) 2 வருடங்களாக புறாப் பந்தயங்களை ஒழுங்கு செய்து நடத்தி வருகிறது. இலங்கையின் மிகக் கூடிய தூரப் போட்டியான “ட்ராகன் மவுத்” நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தின் பிரபல மகப்பேற்று மருத்துவரும் புறா ஆர்வலருமான மருத்துவ நிபுணர் கே.சுரேஸ்குமாரின் அனுசரணையோடு இந்தப் போட்டி மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்கின்றனர் பபுகயா நிர்வாகிகள்.

