வடக்கு மாகாணத்தின் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக வெப்பநிலை காணப்படும் என்று வளிமண்டலவில் திணைக்களம் அறிவுறுத்திறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 35.1 பாகை செல்சியஸாகவும், வவுனியா மாவட்டத்தில் 37.6 பாகை செல்சியஸாகவும், மன்னார் மாவட்டத்தில் 33 பாகை செல்சியஸாகவும் வெப்பநிலை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிக வெப்பநிலை காணப்படும் நேரங்களில் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதிகளவு நீர் அருந்துவது நன்மை பயக்கும் என்றும் சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

