Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பௌத்தத்தை வடக்கில் பலப்படுத்தவே பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

April 6, 2019
in News, Politics, World
0

பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதியின் ஊடாகவே வடக்கு- கிழக்கில் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழில்  வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பாதுகாப்புக்காக 300க்கும் மேற்பட்ட பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

யுத்தத்தின்போது பாதுகாப்புக்காக 150 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் பாதுகாப்புக்கான நிதி 2மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாறு பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியூடாகவே வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது வெறுமனே இராணுவத்தை பலப்படுத்துவதற்காக மட்டும் ஒதுக்கப்படவில்லை என தெரிவித்த ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், பௌத்த மதத்தை வடக்கில் பலப்படுத்துவதற்காகவே இவ்வாறு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தினார்.

Previous Post

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

Next Post

எப்-16 போர் விமானங்களில் எதுவும் மாயமாகவில்லை

Next Post

எப்-16 போர் விமானங்களில் எதுவும் மாயமாகவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures