தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்று கொண்டதாக குற்றம் சுமத்தி சசி வீரவன்சவுக்கு எதிராக குற்றப்புலளாய்வுத் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குத் தொடரிலேயே இன்று நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து தீர்ப்பளித்துள்ளது.

