பாராளுமன்றத்தில் இன்று இடம்பெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களிப்பதா? எதிராக வாக்களிப்பதா? என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், கூட்டு எதிரணியும் இன்று காலை 10 மணியளவில் தனித்தனியாக கூடி கலந்துரையாடி தீர்மானத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி – எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோருக்கிடையில் நேற்று மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

